ஆன்மிகம்

vastu tips for home wealth: வீட்ல விதவிதமா ஊறுகா வாங்கி வெச்சா குபேரன் உங்களுக்கு செல்வத்தை கொட்டிக் கொடுப்பாராம்… ஏன் தெரியுமா? – buy and keep varieties of pickle is lucky for your home according to vastu

Samayam Tamil | Updated:

வீட்டில் செல்வம் சேர வேண்டும் என்று என்னென்னவோ செய்கிறோம். ஆனால் நாம் செய்யத் தவறுகிற சின்ன சின்ன வாஸ்து சம்பந்தப்பட்ட விஷயங்களும் பாரம்பரிய ஆன்மீகு வழிமுறைகளும் நம் கைகளில் பணம் தங்காமல் செய்து விடுகின்றன. அவற்றை சரிசெய்து எப்படி எளிமையாக செல்வ வளத்தை பெருக்கலாம் என்று பார்க்கலாம்

​எப்படி பணம் சேர்ப்பது?

பணம் சம்பாதிப்பதற்காக நாய், பேயாக, இரவு, பகலாக அலையும் நிறைய பேரை பார்த்திருப்போம். சிலரோ மிகவு் கடின உழைப்பால் செல்வத்தைப் பெருக்க நினைப்பார்கள். எவ்வளவு தான் கஷ்டப்பட்டு கைநிறைய சம்பாதித்தாலும் பணப்பிரச்சனை இல்லாத மனிதர்களை பார்க்க இயலாது. அதிலும் நிறைய பேருக்கு என்ன செய்தாலும் பணம் கையில் தங்குவதேயில்லை. அவர்களும் பணம் சேமிக்க என்னென்னவோ செய்து பார்த்தாலும் கைக்கு வருவது வாய்க்கு எட்டாமல் போய்விடுகிறது. அந்த லிஸ்ட்டில் நீங்களும் இருக்கிறீர்களா?… அப்போது உங்கள் வீட்டில் இதுபோன்ற சின்ன சின்ன மாற்றங்களைச் செய்யுங்கள். குபேரன் உங்கள் வீட்டில் செல்வ வளத்தை அள்ளி அள்ளி கொடுப்பாராம். அது ஏன் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

​காலியாகும் கஜானா?

சம்பாதிக்கும் பணத்தினை சேமித்து வைத்து சிறக சிறுக செலவு செய்து வந்தாலும், ஒரு கட்டத்தில் ஏதேனும் ஒரு செலவு மொத்தமாக வந்து, வீட்டில் இருக்கும் கஜானாவை காலி செய்துவிடுகிறது.

கை நிறைய சம்பாதித்து பணத்தினை ஒருபக்கம் சேமித்து வைத்தாலும், மறுபக்கம் நம்முடைய முன்னோர்கள் சொல்லும் சில வழிகளையும் கொஞ்சம் பின்பற்றினால் உங்கள் வீட்டில் செல்வம் கொழிக்கும்.

அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இந்த பத்து விஷயங்களைத்தான்…

​குபேர வழிபாடு

வியாழக்கிழமை நாள் என்பது குருவான தட்சிணாமூர்த்திக்கு மட்டும் உகந்த நாள் அல்ல. குபேரனை வழிபடுவதற்கும் இதுதான் சிறப்புக்குரிய நாள். அதனால் வியாழக்கிழமை நாளில் குபேர காலத்தில் குபேரனை வழிபட்டு வந்தால் பணம் பெருகும். அதனால் மறக்காமல் தட்சிணாமூர்த்தியுடன் சேர்த்து குபேரனையும் வழிபட மறந்து விடாதீர்கள்.

​லட்சுமி வழிபாடு

வீட்டில் பொதுவாக மாலை நேரங்களில் காகமாட்சி விளக்கு ஏற்றி வழிபடுவதைப் பெண்கள் வழக்கமாகக் கொண்டிருப்பார்கள். அப்படி ஏற்றும் காமாட்சி விளக்கில் மகாலட்சுமிக்குப் பிடித்த டைமண் கல்கண்டை சிறிது எடுத்துப் போட்டு, அதில் தீபம் ஏற்ற லஷ்மி கடாட்சம் ழுமையாக உங்கள் வீட்டுக்குக் கிடைக்கும்.

​புறா வளர்ப்பது

பொதுவாக வீடுகளில் புறா வளர்ப்பது நல்லது, கெட்டது என இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன. ஆனால் நிறைய சாஸ்திரங்களின் வீட்டில் வெள்ளை புறாக்களை வளர்க்கலாம். அப்படி வெள்ளைப் புறாக்களை வளர்த்து வந்தால், உங்கள் வீட்டில் இருக்கும் பணத்தட்டுப்பாடு நீங்கும்.

​ஊறுகாய்

வீட்டில் பல வித ஊறுகாய் வாங்கி வைத்திருந்தீர்கள் என்றால் உங்கள் வீட்டில் பணக்கஷ்டம் என்பதே வராதாம். செல்வ வளம் பெருகிக் கொண்டே இருக்குமாம். அப்படித்தான் குபேரன் உங்களுக்கு எல்லா வளங்களையும் வாரி வாரி வழங்குவாராம். அது ஏன் ஊறுகாய் என்று நீங்கள் கேட்கலாம். பொதுவாக குபேரன் உப்பு அதிகமாக இருக்கும் உணவுகள் மற்றும் ஊறுகாயை விரும்பி சாப்பிடுவாராம் அதனால் நீங்கள் வீட்டில் எவ்வளவு விதவிதமாக ஊறுகாய் வாங்கி வைக்கிறீர்களோ அவ்வளவு செல்வ வளம் பெருகுமாம். குபேரன் உங்கள் வீட்டிலேயே குடியிருப்பாராம்.

​தண்ணீர் தானம்

நமது வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு தண்ணீர் குடிப்பதற்காக நிறை சொம்பில் கொடுங்கள். பின் மஞ்சள் குங்குமம் வைத்துத் தரவும். இதனால் ஜென்ம ஜென்மாந்திர தரித்திரமாக இருந்தாலும் தீர்ந்து பண வரவு உண்டாகுமாம். ஒரு பெண்ணின் தாகம் தீர்த்த புண்ணியமும் வாழ்த்தும் உங்களை வந்து சேரும்.

​நோ கோலம்

தினமும் அதிகாலையில் எழுந்ததும் பெண்கள் வாசல் கழுவி, கோலம் போடுவது வழக்கம். அதிலும் அமாவாசை நாட்கள் என்றால் வழிபாட்டுக்கு உரிய நாள் தானே என்று நினைத்து ஸ்பெஷல் கோலங்கள் போட்டு வைப்பார்கள். ஆனால் உண்மை என்ன தெரியுமா? அமாவாசை அன்று வீட்டு வாசலில் கோலம் போடக்கூடாது. தலைக்கு எண்ணெய் தடவக் கூடாது. பூஜையை காலைப் பொழுதில் செய்யக்கூடாது. பிதுர்களாகிய முன்னோர்களை மட்டுமே வழிபட வேண்டும். அப்படி செய்தால் உங்களுக்கு எல்லா செல்வ வளமும் உண்டாகி, பணம் வரும்.

​பால்

பொதுவாக வீட்டில் மாலை நேரத்தில் விளக்கு ஏற்றியவுடன் பால், தயிர், குடிநீர், உப்பு, ஊசி, நூல் ஆகியவற்றை யார் கேட்டாலும் தானமாகத் தரக்கூடாது. உப்பு தெரியும். ஆனால் பால், தயிரும் தரக்கூடாதாம். பெரும்பாலான பெண்கள் தூங்கச் செல்லும் வேளையில் உறை தயிருக்காக கிண்ணத்தைத் தூக்கிக் கொண்டு வீடு வீடாக ஏறி இறங்குவார்கள். இனி நீங்களும் அப்படி செய்யாதீர்கள். யாருக்கும் கொடுக்காதீர்கள். கையில் இருக்கும் பணம் கூட ஓடிவிடுமாம்.

​கோமியம்

பசுவின் கோமியத்தில் தினமும் சிறிதளவு குளிக்கும் நீரில் கலந்து குளிக்கவும். வீட்டில் தெளிக்கவும் . இதை தொடர்ந்து 45 நாட்கள் விடாமல் செய்திட தரித்திரம் தீர்ந்து பணம் வரும்.

அதேபோல பசும்பாலை சுக்ர ஓரையில் வில்வ மரத்திற்கு ஊற்றவும். 24 வெள்ளிக்கிழமை செய்திட நிச்சியமாக பணம் வரும்.

​பாசிப்பருப்பு

மிகவும் சுவையானது, ஆரோக்கியமானது என நாம் ரசித்துச் சாப்பிடும் பாசிப்பருப்பு நமக்கு செல்வத்தை அள்ளிக் கொடுக்குமாம். பாசிப்பருப்பை ஒரு பச்சை பையில் மூட்டையாக கட்டிதலையடியில் வைத்து உறங்கி மறுநாள் அதனை ஒருபிளாஸ்டிக் பையில் கொட்டி மூடி ஓடும் நீரில் விடவும் பணப்பிரச்சனை தீரும்.
Source link

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close
%d bloggers like this: