ஆன்மிகம்

types of vrats: உண்மையில் விரதங்கள் மொத்தம் எத்தனை? சாஸ்திரப்படி எந்த விரதத்தை எப்படி மேற்கொள்ள வேண்டும்? – types of vrats according to hindu sastra in tamil

Samayam Tamil | Updated:

செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, அமாவாசை, பௌர்ணமி, சனி விரதம் இப்படி ஏராளமான விரதங்கள் இருப்பார்கள். ஆனால் உண்மையில் சாஸ்திரப்படி விரதங்கள் எத்தனை வகை, எந்தெந்த விரதங்களை எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி இங்கே விளக்கமாகப் பார்க்கலாம்.

​இந்து சாஸ்திரமும் விரதங்களும்

இந்து மதத்தில் இதுவரை நீங்கள் அறிந்திராத விரத வகைகளும் அதன் முக்கியத்துவமும் நமது இந்து மதம் ஏகப்பட்ட சடங்குகளையும் மரபுகளையும் உள்ளடக்கிய ஒன்று. இதனால் தான் நமது நாட்டில் பல புனித விழாக்களாக இருக்கட்டும் கடவுள் வழிபாடாக இருக்கட்டும் எல்லாரும் ஏகப்பட்ட கட்டுப்பாடுகளையும் விரதங்களையும் மேற்கொள்ளுவார்கள். இருப்பினும் பெரும்பாலான மக்களுக்கு இந்த விரத முறைக்கு பின்னால் இருக்கும் அறிவியல் என்னவோ தெரிவதில்லை. இதை அவர்கள் நமது முன்னோர்களின் வழித்தோன்றலாக மட்டுமே பார்க்கின்றனர்.

விரதம் என்றாலே ஒரு நாள் முழுவதும் சாப்பிடாம இருந்து கடவுளை வழிபாடு செய்ய வேண்டும் என்பதே மக்களின் புரிதலாக உள்ளது. ஆனால் உண்மையில் இதற்கு பின்னால் இருக்கும் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்ள வேண்டும். அப்படி தெரிந்து கொண்டால் ஒவ்வொரு வழிபாட்டை யும் நாம் இன்னும் கூடுதல் நம்பிக்கையுடன் பின்பற்றி வருவோம் அல்லவா. அதனால் தான் இங்கே பல்வேறு விதமான விரத முறைகளை பற்றியும் அதன் முக்கியத்துவத்தை பற்றியும் காணப் போகிறோம்.

​விரத வகைகள்

விரதத்தில் இரண்டு வகைகள் உள்ளன. 1. சாகம் (எதிர்ப்பார்ப்புடன் செய்வது) 2.நிஷ்காம் -(எதிர்பார்ப்பு இல்லாத நிலை)

சாகம் விரதம்

ஒரு குறிப்பிட்ட விருப்பம் நிறைவேறுவதற்காக அல்லது நினைத்தது வேண்டுதல் நடப்பதற்காக கடவுளை வேண்டி விரதமிருப்பது சாகம் முறையாகும். இந்த விரத முறையை பற்றி முனிவர்கள் தடுத்த 18 புனித நூல்கள் தெளிவாக கூறுகின்றனர். தந்திரம் நூல்கள் வெவ்வேறு விரத வழிபாட்டின் மூலம் கடவுளுக்கு காணிக்கைகளை கொடுத்து நினைத்தது நிறைவேற வழி வகை செய்கின்றன. இது ஒரு தற்செயலான விரத முறை. இந்த விரதத்தை கடைபிடிக்க டிக்க நல்ல நேரத்தை பார்த்து மேற்கொள்ளப்படுகிறது. சந்திர திதி நாளில் இது தவிர்க்கப்படுகிறது.

இந்த சத்தியநாராயணா விரதம் விருப்பங்களை விரைவாக நிறைவேற்ற உதவுகிறது. இந்த விரதத்தால் கடவுளின் மனது குளிர்ந்து நினைத்தது நிறைவேற்றப்படுகிறது.

​எதிர்ப்பார்ப்புடன் செய்யப்படும் விரதங்கள்

தர்மம்

இந்த விரதத்தின் போது ஸ்ரீ ராம் பெயரை உச்சரித்த வண்ணம் ஒரு வாரம் பகவத்கீதையை பராயாணம் செய்ய வேண்டும். இப்படி செய்து வந்தால் நினைத்தது நிறைவேறும் என்கிறது இந்து மதம்.

​ஆர்த் (செல்வ வளம்)

உங்களுக்கு செல்வ வளம் கிடைக்க வேண்டும் என்றால் இந்த விரதம் பயன்படுகிறது. இந்த விரதம் லட்சுமி தேவி மற்றும் ஸ்ரீ கிருஷ்ணனை நோக்கி மேற்கொள்ளப்படுகிறது.

​காமா (ஆசைகள் நிறைவேற)

சனி பிரதோஷம்(ஒரு குறிப்பிட்ட திதி நாளில் இரவின் முதல் பகுதியில் சனி கிரகத்தால் ஏற்படும் விளைவுகளை குறைப்பதற்காக இந்த விரதம் மேற்கொள்ளப்படுகிறது. ஸ்ரீ குருச்சரித்திரத்தை பராயாணம் செய்தல், ஹரிவர்ஷன் புராணம் படித்தல், சோலசோமுவர் பூஜை (ஒரு மகனைப் பெற சிவனை நோக்கி 16 திங்கள் வழிபடுதல்) போன்ற ஆசைகளை நிறைவேற்ற இந்த விரதங்கள் மேற்கொள்ளப்படுகிறது.

​மோட்சம் (இறுதி நிலை)

பக்தி மோட்சம் பெறுவதற்காக 16 திங்கட் கிழமை இந்த வழிபாடு செய்யப்படுகிறது.

நிஷ்காம் விரதம் (எதிர்பார்ப்பு இல்லாத நிலை). எதிர்பார்ப்பு இல்லாத நிலை என்பது இந்த உலகத்தில் எதையும் எதிர்பார்க்காத நிலை மட்டுமல்ல. எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் வழிபாட்டில் கூட கடவுளை அல்லது மோட்சத்தை அடைய வேண்டும் என்பதை குறிக்கிறது.

​வழக்கமான தற்செயலான நிலையை பொருத்து விரத வகைகள்

வழக்கமான விரதம் முறைகளைப் போல தான் இந்த விரதமும். இந்த விரதத்தின் போது கடமைகள் அனைத்தும் வர்ணா முறைப்படி செய்யப்படுகிறது. உதாரணமாக பிரம்மச்சாரிய சடங்குகள், பூஜை (கடவுள் வழிபாடுகள்), வரலட்சுமி விரதம் போன்றவை தினந்தோறும் செய்யப்படுகிறது.

​தற்செயலான விரதங்கள்

இந்த விரதங்கள் குறிப்பிட்ட திதி தேதிகளில் மட்டும் மேற்கொள்ளப்படுகிறது. உதாரணமாக முழு பெளர்ணமி நாள், மங்களகூர், விநாயகர் சதுர்த்தி, ஹரித்தாலிக தீஜ், லட்சுமி பூஜை, ரிஷி பஞ்சமி போன்ற விரதங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

​தேவைகளைப் பொருத்து விரத வகைகள்

தவம் புரிதல் இதில் மிக முக்கியமான விரத முறையாகும். இந்த விரதம் ஒரு தவமாக மேற்கொள்ளப்படுகிறது. கடவுளிடம் வரம் கேட்டு தவம் புரிதல். க்ருச்சா, அர்த்தக்ருச்சா, சந்திராயஸ் போன்ற தவங்களை மேற்கொள்ளுதல்.

அத்தியாவசியமான கடமைக்கு விரதம் புரிதல்

சில அத்தியாவசியமான கடமைகளுக்காக விரதம் புரிந்து கடமைகளை செய்வர். உதாரணமாக வர்ணா முறையின் படி பிரம்மச்சாரியம், சந்தியா வர்ணம் செய்தல், விருந்தினரை உபசரித்தல் போன்றவை அடங்கும்.

தானாக முன் வருதல்

நம்முடைய சில வேண்டுதல்கள் நிறைவேறுவதற்காக விரமிருத்தல். உதாரணமாக சாகம் விரதம்.

​உறுப்புகளின் படி விரதம் இருத்தல்

உடல் ரீதியாக விரதத்தை மேற்கொள்ளுதல். உதாரணமாக நோன்பு இருத்தல், ஒரு வேளை மட்டும் உணவருந்துதல், உடலை வருத்தாமல் அகிம்சை வழியில் விரதம் புரிதல்.

வாய்மொழி வழியில் விரதமிருத்தல்

கடவுளின் பெயரை ஓதுதல், உண்மையை பேசுதல் மற்றும் பணிவுடன் பேசுவது, மெளன விரதம் போன்றவை அடங்கும்.

மன ரீதியாக விரமிருத்தல்

மனதில் சில எண்ணங்களை தீர்மானதாக கொண்டு விரதம் புரிதல். பிரம்மச்சாரியத்தை கடைபிடிப்பது, மன ரீதியாக அகிம்சையை கடைபிடிப்பது, கோபத்தின் மீது கட்டுப்பாடு வைத்தல்.

​நேரத்தை பொருத்து விரதமிருத்தல்

பெரும்பாலான விரதங்கள் பிரதமை மற்றும் சப்தமி (இந்து நாட்காட்டின் படி சந்திர தரிசனத்தின் 7 வது நாள்) அஷ்டமி (சந்திர தரிசனத்தின் 8 வது நாள்) இந்த நாட்களில் விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. ஏனெனில் அன்றிலிருந்து வளர்பிறை வளரத் தொடங்குகிறது. எனவே இந்த கால கட்டத்தில் விரதம் புரிவது சிறப்பு. மேலும் இந்து சந்திர பஞ்சாங்கத்தின் படி ஆண்டின் அறை பகுதி , சகாப்தம், மாதம், பதினைந்து, தேதி, நாள், ஆளும் விண்மீன், கிரகங்களின் நிலை (யோகம்), அரை நாள் போன்றவற்றை கருத்தில் கொண்டு விரதங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

​மகா சிவராத்திரி விரதம்

இந்த விரதம் குறிப்பாக வைகாசி மாதம், புரட்டாசி மற்றும் கார்த்திகை மாதம் மேற்கொள்ளப்படுகிறது. இதை மகா சிவராத்திரி அல்லது மாஸ் சிவராத்திரி என்றும் அழைக்கின்றனர். இது மாத கால விரத முறையாகும்.

சுக்லா பக்ஷா (நவராத்திரி விரதம்)

இந்த விரதம் சந்திரனின் ஒளி மிகு நாளில் அதாவது வளர்பிறை நாளில் அல்லது தேய்பிறை நாட்களில் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் இந்த நவராத்திர விரதம் இருப்பவர்களும் உண்டு. நவராத்திரி கொண்டாட்ட நாட்களில் இன்னும் சிறப்பாக, கூடுதல் சிரத்தையுடன் பெண்கள் இந்த விரதத்தை மேற்கொள்வார்கள்.

திதி விரதம்

இந்த விரதம் சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு கொண்டாடப்படுகிறது. 15 நாட்களுக்கு சுழற்சி முறையில் வரும் தேய்பிறை மற்றும் வளர்பிறை நாட்களை திதி என்று கூறுவார்கள். சந்திர பஞ்சாங்கத்தின் படி நான்காம், பதின்மூன்றாம் நாள், அமாவாசை நாட்களில் திதி விரதம் மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பிட்ட திதிகளுக்கு விரதம் இருப்பது வழக்கம்.

​வார விரதங்கள்

இந்த விரதங்கள் வார நாட்களில் மேற்கொள்ளப்படுகிறது. திங்கள், செவ்வாய், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் வார விரதங்கள் அனுஷ்டிக்கப்படுகிறது. பொதுவாக இந்த வகை விரதங்கள் பெரும்பாலும் எல்லோராலும் கடைபிடிக்கப்படுகிறது.

​நட்சத்திர விரதம்

இந்த விரதங்கள் நட்சத்திரங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது. விசாகம், ரோகினி, அனுஷம் போன்ற நட்த்திரங்கள் வரும் கால கட்டத்தில் நட்சத்திர விரதம் மேற்கொள்ளப்படுகிறது.

​கடவுளின் வழிபாட்டை பொருத்து விரதங்கள்

இஷ்ட தெய்வங்களைப் பொருத்து விரதங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. கணேஷ விரதம், சூரியன் விரதம், சிவன் விரதம், விஷ்ணு விரதம் மற்றும் தேவி விரதம் என்று இப்படி இஷ்டப்பட்ட தெய்வங்களுக்காக விரதம் மேற்கொள்ளப்படுகிறது.

​தனிப்பட்ட மற்றும் கூட்டு முறையில் விரதமிருப்பது

பெரும்பாலான விரதங்கள் தனிப்பட்ட விதத்தில் இருப்பதாகவே இருக்கிறது. ஒரு சில விரதங்கள் மட்டுமே அனைவராலும் அனுஷ்டிக்கப்படுகிறது. பிரதிபாதத்தில் வரும் விநாயகர் சதுர்த்தி விரதங்கள், ஆவனி மாதத்தில் வரும் சஷ்டி விரதங்கள், சித்திரையில் வரும் ராம நவமி போன்ற விரதங்களை ஒரே நேரத்தில் எல்லாரும் ஏற்கின்றனர்.

​ஆண் மற்றும் பெண்களுக்கான விரதங்கள்

பொதுவாக எல்லா விரதங்களையும் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருமே இருக்கலாம். ஒரு சில விரதங்களான வரலட்சுமி விரதம், சாவித்திரி விரதம் போன்றவை பெண்களால் மட்டுமே அனுஷ்டிக்கப்படுகிறது. இந்து தர்மத்தைப் பொருத்தவரையில், ஆண் மற்றும் பெண்களுக்கான விரத முறைகளில் நிச்சயம் வேறுபாடு உண்டு.

​செய்யும் தொழிலை பொருத்து விரதங்கள்

சில குறிப்பிட்ட விரதங்கள் தொழில் தொடங்குபவர்களுக்கு, வர்த்தகம் செய்பவர்கள் மட்டுமே கடைபிடிக்க வேண்டும். செல்வவளம் பெருக, தொழில் சிறக்க, வணிகம் மேம்படக் கூட விரதங்கள் இருக்கின்றன.

மேற்கண்ட அடிப்படையில் விரதங்கள் பிரிக்கப்படுகிறது. நமக்கு ஏற்ற விரதங்களை புரிந்து கடவுளின் அருளையும் ஆசியையும் பெற்றுக் கொள்ளலாம்.
Source link

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close
%d bloggers like this: