தமிழகம்

tn local body election date 2019: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு! – local body election date for tamil nadu announced today

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. இதுதொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன. இவற்றில் எந்தவொரு வழக்கிற்கும் தீர்வு எதுவும் எட்டப்படாத நிலையில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.


வரும் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தேர்தல் ஆணையர் பழனிசாமி, ஊரக உள்ளாட்சி பகுதிகளுக்கான தேர்தல் தேதி மட்டுமே அறிவிக்கப்படுகிறது.

உள்ளாட்சித் தேர்தல்: எல்லா இடங்களிலும் வாக்குப்பெட்டி… இங்கு மட்டும் ஈவிஎம்… எங்கு? ஏன்?

வேட்புமனு தாக்கல்: டிசம்பர் 6

வேட்புமனு கடைசி நாள்: டிசம்பர் 13

வேட்புமனுக்கள் மீது பரிசீலனை: டிசம்பர் 16

வேட்புமனு திரும்ப பெற கடைசி நாள்: டிசம்பர் 18

முதல்கட்ட வாக்குப்பதிவு: டிசம்பர் 27

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: டிசம்பர் 30

வாக்குப்பதிவு நேரம்: காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை

வாக்கு எண்ணிக்கை: ஜனவரி 2, 2020(காலை 8 மணிக்கு தொடக்கம்)

மறைமுகத் தேர்தல் கூட்ட நாள்: ஜனவரி 11, 2020

ஊரக உள்ளாட்சிகளில் மொத்தம் 1,18,974 பதவி இடங்களை நிரப்ப நேரடித் தேர்தல் நடைபெறும். 31 மாவட்ட ஊராட்சிகளுக்கு உட்பட்ட 655 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது.

இதேபோல் 388 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 6,471 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. 12,524 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கும், 99,324 கிராம ஊராட்சி உறுப்பினர் பதவி இடங்களுக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது.

தமிழக முதல்வர் ஆலோசனை கூட்டம்

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்தார். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்குச் சீட்டு முறையில் வாக்குப்பதிவு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source link

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close
%d bloggers like this: