செய்திகள்

TN government doctors strike: தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் இன்று வேலை நிறுத்தம்! – government doctors start one day strike across tamilnadu

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்திய மருத்துவக் குழுவின் ஆணைப்படி அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவர்கள் பணியிடங்களின் எண்ணிக்கையை 4டி-2 என்ற எண் அரசாணையின் மூலம் குறைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்; அரசு மருத்துவர்களுக்கு காலம் சார்ந்த ஊதிய உயர்வு வழங்க வேண்டும்; பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கு பணியிட கலந்தாய்வை நடைமுறைப்படுத்த வேண்டும்; பட்ட மேற்படிப்பு மற்றும் உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளில் தமிழக அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 50% இட ஒதுக்கீட்டை மீண்டும் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் கூட்டமைப்பு சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

தீபாவளி பண்டிகை- அரசு பேருந்துகளில் இன்று டிக்கெட் முன்பதிவு தொடக்கம்!

அந்தவகையில் சென்னை அரசு பொது மருத்துவமனையில் பெருமாள் பிள்ளை, நளினி, நாச்சியப்பன், அனிதா, அகிலன், ரமா ஆகிய 6 அரசு மருத்துவர்கள் கடந்த 23-ம் தேதி முதல் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அவர்களின் உடல் நிலை மிகவும் மோசமடைந்ததைத் தொடர்ந்து, 6 பேரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு அவர்களை நேரில் சந்தித்து, உண்ணாவிரதத்தைக் கைவிடும்படி வலியுறுத்தினார். ஆனால் கோரிக்கைகள் நிறைவேறும் வரை உண்ணாவிரதம் தொடரும் என மருத்துவர்கள் திட்டவட்டமாக கூறி விட்டனர்.

அமேசான் காடுகளில் பரவும் தீயை அணைக்க 5 மில்லியன் டாலரை வாரி இறைத்த பிரபல நடிகர்!

இந்நிலையில், அடுத்தகட்டமாக இன்று காலை 7.30 மணி முதல் நாளை காலை 7.30 மணி வரை, 24 மணி நேரம், தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால், அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்க நிர்வாகிகள் கூறுகையில்: புறநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகள் சிகிச்சையைப் புறக்கணிக்க உள்ளோம். அதேவேளையில், அவசர சிகிச்சைப் பணிகளில் வழக்கம் போல மருத்துவர்கள் ஈடுபடுவர். இப்போராட்டத்தில் மொத்தம் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்க உள்ளதாக தெரிவித்தனர்.

சிதம்பரத்துக்கு நாளை வரை இந்த சிக்கல் இல்லை!!
Source link

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close
%d bloggers like this: