தமிழகம்

Tamil Nadu Weather Today: Chennai Rains: தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழை – 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! – heavy rain and light rain chances in several parts of tamil nadu says met officials

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வந்தது. இதனால் மாநிலம் முழுவதும் உள்ள நீர்நிலைகள் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.


சில இடங்களில் ஊருக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதால் பொதுமக்கள் சிரமத்தில் ஆழ்ந்துள்ளனர். அடுத்த சில நாட்களில் மழையின் அளவு படிப்படியாக குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

அட நம்புங்க சார், ஒரு கிலோ முருங்கை 600 ரூ. மட்டும்தான்..வெங்காயம் எவ்வளவுன்னு நீங்களே பாருங்க!

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள், தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது.

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகர் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. குமரிக்கடல் பகுதியில் சூறைக்காற்று வீசக்கூடும்.

நகைக் கடன் கேள்விப்பட்டிருக்கிறோம்… இது என்ன புதுசா இருக்கும்?!

எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனக் கூறினர்.

இந்நிலையில் இன்று காலை சென்னையில் உள்ள மடிப்பாக்கம், வேளச்சேரி, ஆதம்பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்துள்ளது.

ஒரே மணி நேரத்தில் தீண்டாமையை ஒழித்த ஸ்டாலின் : கலாய்க்கும் நெட்டிசன்கள் !!

தேனியில் உள்ள 71 அடி கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் கனமழை காரணமாக தற்போது 68.5 அடியாக உயர்ந்துள்ளது. இதையொட்டி 5 மாவட்ட கரையோர மக்களுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
Source link

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close
%d bloggers like this: