ஜோதிடம்

Sani Peyarchi Palangal: Mithuna Rasi: மிதுன ராசி சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020 – 2023 – saturn transit in gemini 2020 to 2023 effects based on guru peyarchi and rahu ketu peyarchi in tamil

Samayam Tamil | Updated:

சனிப்பெயர்ச்சி வரும் 2020 ஜனவரி 24ஆம் தேதி நிகழ இருக்கிறது. இதனால் மிதுன ராசிக்கு எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும் என்பதை விரிவாக பார்ப்போம்…

சனிப்பெயர்ச்சி

Image Courtesy

திருக்கணித பஞ்சாங்கத்தின் படி சனிப்பெயர்ச்சி ஜனவரி 24ஆம் தேதி தனுசு ராசியிலிருந்து காலபுருஷ லக்கினத்திற்கு 10ஆம் இடமான மகர ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார்.

ஒவ்வொரு ராசிக்கும் ஒருவித பலன்கள் கிடைக்கும். மிதுன ராசிக்கு சனி பகவான் 8ஆம் இடம் அதாவது அஸ்டமத்து சனியாக வர உள்ளார். இதனால் பலரும் பயந்திருப்பீர்கள். ஆனால் இந்த முறை சனி பகவான் உங்களுக்கு மிகப்பெரிய யோக பலன்களை கொடுக்க உள்ளார்.

இதில் எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும் என்பதை விரிவாக பார்ப்போம்…

Also Read: சனிப்பெயர்ச்சி அஷ்டமத்து சனி, கண்டக சனி, அர்த்தாஷ்டமச் சனி என்றால் என்ன?- சனி பெயர்ச்சி பரிகாரங்கள்

மிதுன ராசியின் பொது குணங்கள்

Image Courtesy

சிலர் நன்றாக எழுதுவார்கள், சிலர் நன்றாக பேசுவார்கள், ஆனால் இந்த இரு திறமையும் நிரம்பியவராக இருப்பவர்கள் தான் மிதுன ராசி, அல்லது மிதுன லக்கினத்தில் பிறந்திருப்பார்கள். ஏனென்றால் அவர்களுக்கு இரண்டாம் காரகன் சந்திரனாக இருப்பதால் அவர்கள் பேசும் பேச்சும், எழுத்தும் மற்றவர்களை வசீகரிக்கும் வகையில் இருக்கும்.

நடிப்புத் துறை, எழுத்தாளராக இருக்கும் பலரும் மிதுன ராசியினராக இருப்பர். தங்களைத் தாங்களே காதலிப்பார்கள். அதாவது தங்களை அதிகம் விரும்புவதோடு விட்டுக் கொடுத்துக் கொள்ளாத குணமுடையவராக இருப்பர். சிறந்த பேச்சுத் திறமை இருக்கும்.

Also Read: சனிப்பெயர்ச்சி 2020: ஏழரை சனி யாருக்கு முடிகிறது… யாருக்கு என்ன சனி தொடங்குகிறது தெரியுமா?

அஷ்டமத்து சனி

இந்த சனிப்பெயர்ச்சியால் மகர ராசியில் சனி பகவான் 2 1/2 ஆண்டு (இரண்டரை) காலம் அமர உள்ளார். சனி பகவான் 8 மற்றும் 9ஆம் இடத்திற்கு (தனுசு மற்றும் மகரம்) அதிபதியாக உள்ளார்.

9ஆம் இடம் என்பது சனி பகவானுக்கு மூல திரிகோண இடம். அப்படி மூல திரிகோண முழு பலனை அனுபவிக்கப் போகும் ராசி தான் மிதுன ராசி.

இத்தனை காலம் 7ஆம் இடத்தில் இருந்த சனி, தற்போது 8 ஆம் இடத்திற்கு செல்ல உள்ளார். நல்ல தசா புத்திகள் நடந்து கொண்டிருக்கும் மிதுன ராசியினருக்கு அஷ்டமத்து சனியால் எந்த பிரச்சினையும் இல்லை. அவர்களுக்கு எந்த ஒரு பாதிப்பு ஏற்படாது.

​3 வருடங்கள் அனுபவிக்கும் பொது பலன்:

சனிப்பெயர்ச்சி 2020, 2021, 2022, 2023 ஜனவரி மாதம் அடுத்த சனிப்பெயர்ச்சி நடக்கும். இதனால் மூன்று பகுதிகளாக இந்த சனிப்பெயர்ச்சியை பிரித்துக் கொள்வது நல்லது.

சனிப் பெயர்ச்சி என்பது அவரை மட்டும் கணக்கில் வைத்து சொல்வதால் பலன் சரியாக வராது. அதோடு இடையில் வரும் மூன்று குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சியையும் கணக்கில் கொள்வது அவசியம்.

இதுவரை இருந்து வந்த சௌகரிய நிலை இனி அவ்வளவாக இருக்காது. பலவற்றில் தடை ஏற்படும். கடன் வாங்கும் போது மிக கவனமாக இருக்க வேண்டும். ஏற்கனவே கடன் வாங்கி இருந்தால் அதனை சரியாக திருப்பி செலுத்த முயலுங்கள். புதிய கடன் வாங்குவதில் கூடுதல் கவனம் தேவை. வேண்டாம் என்றே சொல்லலாம்.

Also Read: சனிப்பெயர்ச்சியால் யோகங்களை பெற உள்ள ரிஷப ராசி

​எப்படி நடந்து கொள்வது?

உங்கள் குடும்பத்தில் இருக்கும் பிரச்சினைகளை மட்டும் கவனியுங்கள். உங்களின் உறவினர்களின் குடும்ப பிரச்சினைகளில் தலையிடுதல், ஆலோசனை வழங்குதல் வேண்டாம்.

கூடுமான வரையில் விட்டுக் கொடுத்துச் செல்வது மிகவும் சிறந்தது. குடும்ப உறுப்பினர்கள், உறவினர்களுடன் பேசும் போது கவனமாக பேசுதல் நல்லது. உங்களால் முடியும் என்பதில் மட்டும் வாக்கு கொடுங்கள். இல்லை என்றால் எதற்காகவும் வாக்கு கொடுப்பதை தவிர்த்து விடுங்கள்.

​2020, 2021 பலன்கள்:

2020 பலன்கள்:

2019 நவம்பரில் குருப் பெயர்ச்சி நடந்துள்ள நிலையில் மிதுன ராசிக்கு மிகுந்த சாதகமானதாக இருக்கின்றது. உங்கள் ராசிக்கு 7ஆம் இடமான தனுசுவிலிருந்து நேராக பார்த்து அருள் செய்கிறார். இதனால் இந்த வருடம் அதாவது 2020 மிக அருமையான ஆண்டாகச் செல்லும்.

2021 பலன்

2021ல் குரு பகவான் 8ஆம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகி நீசம் ஆகிவிடுவார். அங்கு சனியும் ஆட்சியான நிலையில் இருப்பார்.

அதனால் அந்த ஆண்டில் சில மன உளைச்சலுக்கு ஆளான ஆண்டாக செல்லும். என்ன வேலை செய்தாலும் சரியான ஊதியம் இல்லையே, காரிய வெற்றி இல்லையே, மன ஆறுதலான வார்த்தை இல்லையே, பாராட்டு இல்லை, வீட்டில் சரியான மாரியாதை இல்லை என்ற பல்வேறு மனக் கசப்புகள் இருக்கும்.

​2022 பலன்

2022 பலன்

குரு பகவான் 9ஆம் இடத்திற்கு பெயர்ச்சி ஆவார். சனி பகவான் அதே இடத்தில் இருப்பார். குரு 9ஆம் இடத்திற்கு பெயர்ச்சியாகி உங்கள் வீட்டின் முதல், 3ஆம் வீடு, 5ஆம் வீட்டைப் பார்ப்பார். இது முதல் ஆண்டில் நீங்கள் பட்ட கஷ்டத்திற்கு நல்ல மருந்தாக இருக்கும். இந்த ஆண்டில் உங்களுக்கு ராஜ யோக காலமாக இருக்கும். தொழில் வளர்ச்சி, தொழிலில் லாபம் கிடைக்கக் கூடிய காலமாக அமையும்.

வேலையில் முன்னேற்றம், வியாபாரம் செழிப்பு, உயர் அதிகாரிகளின் பாராடு, அவர்கள் உங்களை நிறுவனத்தின் சொத்தாக பார்ப்பார்கள்.

குழந்தைகளின் கல்வி சிறக்கும். குடும்பஸ்தர்களுக்கு மன நிம்மதி நிறைவாக கிடைக்கும்.

​பரிகாரங்கள்

கிரகங்களின் பெயர்ச்சியின் பொழுது ஒவ்வொரு ராசி, லக்கினத்திற்கு ஒவ்வொரு வகை பரிகாரங்களை செய்து அதிலிருந்து சற்று ஆறுதல் பெற முன்னோர்கள் சில பரிகாரங்களை வகுத்து வைத்துள்ளனர்.

மிதுனம் புதன் பகவான் அதிபதியாக இருப்பதால், புதன் கிழமை தோறும் பெருமாள் கோயில் அல்லது சரஸ்வதி அம்மன் கோயில் இவற்றில் ஏதேனும் ஒரு கோயிலுக்காவது சென்று தினமும் புதன் ஹோரை நேரங்களில் சென்று வழிபட்டு வாருங்கள். இதை தொடர்ந்து ஒரு மண்டலங்கள் செய்து வர எல்லா கஷ்டங்களும் நீங்கும்.

சனி பகவானுக்கு உங்களின் ராசி அதிபதி புதன் பகவான் நண்பன். அதனால் பெரிய அளவில் கெடுதலை தரமாட்டார்.

விஷ்ணு வழிபாடு

அஸ்டமத்து சனி மட்டுமல்லாமல் மற்ற சனி பலன்களை அனுபவிப்பது நம் விதி. அதனை யாராலும் மாற்ற முடியாது. ஆனால் அதனால் ஏற்படும் பாதிப்பிலிருந்து சற்று ஆறுதல் பெற பரிகாரங்களை ஒரு மண்டலத்திற்கு தொடர்ச்சியாக செய்து வந்தாலே போது. முடிந்தால் உங்களின் வீட்டில் விஷ்ணு சகஸ்ரநாமம் படியுங்கள் அல்லது பாடலாக கேளுங்கள். அதனால் மன அமைதி கிடைக்கும்.

சனிக்கிழமைகளில் சிவ ஆலயத்திற்கு சென்று அனைத்து தெய்வங்களையும் வணங்கி வந்த பின்னர் நவகிரகங்களில் சனி பகவானை நன்றாக வணங்கி வாருங்கள்.

Web Title saturn transit in gemini 2020 to 2023 effects based on guru peyarchi and rahu ketu peyarchi in tamil

(Tamil News from Samayam Tamil , TIL Network)




Source link

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close
%d bloggers like this: