ஜோதிடம்

mesha rasi: Guru Peyarchi 2019: மேஷ ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள் – jupiter transit 2019 predictions and benefits for aries sign

மேஷ ராசிக்கு குரு பெயர்ச்சி பலன்கள் குறித்து ஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ் அவர்களின் கணிப்பு என்ன என்பதை இங்கு பார்ப்போம்…


குரு பெயர்ச்சி எப்போது?

தமிழ் விகாரி ஆண்டு ஐப்பசி 11ஆம் தேதி, அதாவது அக்டோபர் 28, 2019 அன்று குரு பெயர்ச்சி நடக்க உள்ளது.

இந்த தேதியில் குரு பகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார்.

குரு பெயர்ச்சியின் சிறப்புகள் :
சனிப் பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி, சந்திர பெயர்ச்சியின் போது நம் ராசிக்கு என்ன நன்மை செய்யப் போகிறார், என்ன தீமை நடக்கப் போகின்றது என்பதை எண்ணிக் கலங்கும் நிலை உண்டு.

ஆனால் குரு பெயர்ச்சியைப் பொருத்த வரையில், தான் சுப ஸ்தானத்தைப் பார்த்தால் நன்மையை வாரி வழங்குவதோடு, பாவ ஸ்தானத்தைப் பார்த்தால் கெடுதல் என்று எதுவும் செய்யாமல் சாதாரணமாக விட்டுவிடுவார்.

இதுதான் மற்ற கிரகப் பெயர்ச்சிக்கும் குரு பெயர்ச்சிக்கும் உள்ள பெரிய வித்தியாசம்.

மேஷ ராசிக்கான குரு பகவானின் பலன்கள்:

இத்தனை நாட்கள் 8வது இடமான விருச்சிகத்தில் குரு மறைந்திருந்தார். தன்காரகனான குரு மறைந்திருப்பது நல்லதல்ல. இதனால் பொருளாதார பிரச்சினை இருந்திருக்கும்.

தற்போது 9வது இடத்தில் குரு செல்வதால் யோகம் ஏற்படும்.


அஸ்வினி நட்சத்திரத்திற்கான குரு பெயர்ச்சி பலன்கள் (2019- 2020)

9வது இடத்தில் இருப்பதால் என்ன பயன்கள்:

முதலில் ராசியை குரு பார்க்கின்றார். ராசி அல்லது லக்கினத்தைப் பார்ப்பதால் வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டு.

ராசியின் 3வது இடத்தையும் குரு பார்க்கின்றார். 3வது இடத்தில் ஏற்கனவே ராகு அமர்ந்திருக்கின்றார். 3,6,11 ஆகிய இடங்களில் ராகு அமர்ந்திருப்பது யோகம். அதை குரு பார்ப்பது அதியோகம்.இதனால் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும்.

எந்த ஒரு ஜாதகத்திற்கும் 5 மற்றும் 9வது இடம் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகின்றது. இந்த இரண்டையும் குரு பார்ப்பதால் மிகச் சிறந்த பலன்கள் பெற முடியும்.

இளைஞர்களுக்கான பலன்கள்:
குரு 9ஆம் இடத்தில் இருப்பதால் மேஷ ராசியை சேர்ந்த இளம் ஆண் / பெண்களுக்கு திருமண யோகம் உண்டு. வியாழன் நோக்கம் பலம் காரணமாக திருமணம் மற்றும் சுபநிகழ்ச்சி முயற்சிகள் வெற்றி அடையும்.

குழந்தை பாக்கியத்திற்காக ஏங்கி இருக்கும் தம்பதிக்குக் குழந்தை பாக்கியம் கிட்டும். தத்து எடுத்தல் நிகழ்வும் மன நிலையும் ஏற்படும்.

பரணி நட்சத்திரத்திற்கான குரு பெயர்ச்சி பலன்கள் (2019- 2020)


பொருளாதார நிலை:
குரு வக்கிரம் பெற்று இருந்தால் பொருளாதாரம் சிறப்பாக இருந்தாலும் திடீரென சரிய வாய்ப்புள்ளது. இத்தனை நாட்கள் பொருளாதார பிரச்சினை நீடித்த நிலையில், இந்த குரு பெயர்ச்சியில் மேஷ ராசியினருக்கு பொருளாதார வளர்ச்சி ஏற்படும்.

சம்பளம் வராமல் இருந்திருத்தால், கடன் கொடுத்து திரும்ப வராமல் இருத்தல் போன்ற பிரச்சினைகள் நீங்கி, பணம் தேடி வரும். பொருளாதாரம் உயரும்.

9வது இடத்தில் அமர்ந்து 5வது இடத்தைப் பார்ப்பதால் பூர்விக சொத்து கிடைக்கும், கடன் கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும்.

இருப்பினும் வரும் முன் காப்பது நல்லது.


கிருத்திகை நட்சத்திரத்திற்கான குரு பெயர்ச்சி பலன்கள் (2019- 2020)


கல்வி:
கல்வி வாய்ப்புகள் பிரமாதமாக அமைகிறது. ஆரம்பம் மற்றும் உயர்கல்வி வளர்ச்சி மிக சிறப்பாக இருக்கும். கல்விக்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளவர்களுக்கு நல்ல யோகமாகவும், சிறப்பாகவும் படிப்பார்கள்.

மாணவர்கள் கல்வியில் சிறப்பாகவும், கவனமாகவும் படித்து அதிக மதிப்பெண்கள் எடுக்கும் வாய்ப்புகள் உண்டு.

தொழில் :
சொந்த தொழில் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றமான நிலை ஏற்படும். தொழிலுக்கு தேவையான கடன் கிடைக்கும். முதலீடுகளை சொத்துக்களாக வாங்கும் வாய்ப்புகள் உண்டு.

கல்வியை முடித்து வேலை தேடுபவர்களுக்கு மிகச் சிறந்த காலமாக உள்ளது. வெளிநாட்டு வேலை வாய்ப்பு சிறப்பாக கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிர்வாகத்தில் மதிப்பும், சம்பள உயர்வும் கிடைக்கும்.

வெளிநாட்டில் படிப்பவர்களுக்கு அங்கேயே வேலை கிடைக்கும் வாய்ப்புகளும் உண்டு.

அனைத்து நட்சத்திரங்களுக்கான குரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்

பரிகாரம்:

குரு பகவானின் ஆலயமான ஆலங்குடிக்குச் சென்று வருவது நல்லது.

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சென்று வருதல் நல்லது.

அனைவராலும் ஆலங்குடி, திருச்செந்தூர் சென்று வருவது இயலாது என்பதால், அருகில் உள்ள சிவ ஆலயத்திற்குச் சென்று தட்சிணாமூர்த்தியை வணங்குவது நல்ல பலன்களைத் தரும்.
Source link

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close
%d bloggers like this: