ஆன்மிகம்

Malayappa Swami: Tirupati: பிளந்த உச்சியுடன் திருப்பதி ஏழுமலையான்: ஷாக் ஆன தேவஸ்தானம் – tirumala tirupati malayappa swamy urchava statue damaged due to arjitha sevas

ஏழுமலையான் கோவிலில் இருக்கும் திருப்பதி உற்சவர் தலை மற்றும் உடல் பாகங்கள் சேதமடைந்துள்ளதாகவும், அதனால் தேவஸ்தான போர்டு மிகவும் அதிர்ச்சியில் உள்ளனர்.


திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 600 ஆண்டு பழமையான ஐம்பொன் சிலை உள்ளது. அது தற்போது உற்சவராக இருக்கிறது. பிரம்மோற்சவம் மற்றும் விழா காலங்களில் மாடவீதிகளில் பக்தர்களுக்கு காட்சி தந்து வருகின்றார்.

இந்த மலையப்ப சாமி சிலைக்கு தினமும் திருமஞ்சனம் செய்தல், வானகுளியல் ஆகியவை செய்யப்படுகின்றது. அதோடு திங்கட் கிழமைகளில் சகஸ்ர கலச அபிஷேகமும், புதன் கிழமைகளில் வசந்த உற்சவம் உட்பட பல சேவைகள் செய்யப்படுகிறது. தினமும் அபிஷேக, தீப, தூபங்கள் காட்டப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டு வருகின்றது.

Also Read:
எங்கிருந்து வருகிறது நிழல்… சிவனின் நிழலா? – சாயா சோமேஸ்வரா சுவாமி கோயிலில் நிகழும் அதிசயம்

சிலை சேதம்:
மற்ற கோயில்களை விட அதிகளவில் மலையப்ப சுவாமிக்கு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு வருகின்றது.இதனால் சிலை சேதமடைந்துள்ளதாக திருப்பதி ஸ்ரீவாரி கோயில் தலைமை அர்ச்சகரான வேணுகோபால் தீட்சிதுலு தலைமையிலான அகமா குழுவினர் கோயிலில் இருக்கும் மலையப்ப உற்சவ சிலையை ஆய்வு செய்தனர்.

இதில் அதிர்ச்சியளிக்கும் விதத்தில் இருந்தது. உற்சவர் மலையப்ப சாமி சிலையில் உச்சியிலும், அடிப்பகுதியிலும் விரிசல் இருப்பது கண்டறியப்பட்டது.

Also Read:
சிவன் மனைவியின் பெண்ணுறுப்பை விஷ்ணு எதற்காக வெட்டி எறிந்தார்?… எங்கே எறிந்தார்?

அதோடு சிலையில் கண்கள், முகம், வாய், விரல்கள், இடுப்பு பகுதி, சுவாமி ஏந்தி இருக்கும் சங்கு சக்கரம் ஆகிய பகுதிகளில் சுருக்கங்கள் இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எப்படி சேதமடைந்தது?
தினமும் மலையப்ப உற்சவ சுவாமிக்கு திருமஞ்சனம், வான குளியல் செய்யப்படும் காரணத்தால் விரிசல் ஏற்படுத்தியுள்ளது.

Also Read:
இந்த 5 பொருள்ல ஏதாவது ஒன்னு வீட்ல வாங்கி வெச்சா வீட்ல காசுமழை கொட்டும்ங்கிறது ஐதீகம்…

சிலை மேலும் சேதமடையாமல் இருக்க உற்சவருக்கு செய்யப்படும் சகஸ்ர கலச அபிஷேகம், நித்திய வசந்த உற்சவம் ஆகியவற்றை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என அகமா குழு பரிந்துரை செய்துள்ளது. அதோடு சில ஆர்ஜித சேவைகள் நிரந்தரமாக நிறுத்தவும் ஆலோசனை கூறியுள்ளது.

சிலை பழுது பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் அடுத்த மாதம் நடைபெறும் திருப்பதி தேவஸ்தான கூட்டத்தில், அகமா குழுவினரின் பரிந்துரை குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Source link

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close
%d bloggers like this: