செய்திகள்

ks alagiri: நடிகர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்த காங்கிரஸ்.! ஜெயகுமாருக்கு அறிவுரை.. – tn congress committee chairman ks alagiri has expressed his support for actor vijay

சென்னையில் கடந்த 19 ஆம் தேதி நடைபெற்ற பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் ஆளும் கட்சியை விமர்சிக்கும் விதமாகப் பேசியது சர்ச்சையானது. “யாரை எங்கே உட்கார வைக்க வேண்டுமோ அவரை அங்கே உட்கார வைத்தீர்கள் என்றால் எல்லாம் சரியாக இருக்கும்” இவ்வாறு விஜய் கூறினார். இதற்கு அதிமுக நிர்வாகிகள் தொடர்ச்சியாகக் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.


நேற்று பத்திரிகையாளரைச் சந்தித்த மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விஜய்யை சாடி பேசினார். மேலும் இசை வெளியீட்டு விழா நடந்த தனியார் கல்லூரிக்கும் உயர் கல்வி துறை நோட்டீஸ் அனுப்பியது. இதில் நிகழ்ச்சியை நடத்த எதன் அடிப்படையில் கல்லூரியில் உரிமம் வழங்கப்பட்டது என்பதைக் குறித்துப் பதிலளிக்குமாறு உயர்கல்வி துறை கேட்டுக்கொண்டது.

விஜய்யின் பேச்சு தொடர்பாகத் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளதாவது, அதிமுகவுக்கு எதிராக விஜய் பேசியிருக்கிறார் என அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் நிர்வாகிகள் தவறாகப் புரிந்துகொண்டுள்ளனர்.

விஜய் எந்த கட்சியையும் சாராத நடிகர். அவருக்கென தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இசை வெளியீட்டு விழாவில் அவர் அரசியல் பேசியதாகக் கல்லூரிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. கல்லூரிக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸை உயர்கல்வி துறை திரும்பப் பெற வேண்டும் எனக் கூறினார்.

விஜய் பேசியதற்குச் சீமான் ஆதரவு தெரிவித்த நிலையில் தற்போது காங்கிரசைச் சேர்ந்த கே.எஸ். அழகிரியும் ஆதரவு கரம் நீட்டியிருக்கிறார்.
Source link

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close
%d bloggers like this: