செய்திகள்

Edappadi K Palaniswami: 17 பேர் பலியான சம்பவம்; 3 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் பழனிசாமி! – tamil nadu cm palaniswami increased compensation after visited coimbatore wall collapse place

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நடூர் பகுதியில் சுற்றுச்சுவர் இடிந்து 17 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த இடத்தை முதல்வர் பழனிசாமி இன்று நேரில் பார்வையிட்டார்.


அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், நேற்றைய தினம் சுமார் 18 செ.மீ மழை பெய்திருக்கிறது. இந்த மழை காரணமாக நடூர் பகுதியில் சுற்றுச்சுவர் விழுந்ததில் அருகே இருந்த 3 வீடுகள் இடிந்து விழுந்தன. இதில் 17 பேர் பலியாகினர்.

இதுபற்றி தகவல் கிடைத்தவுடன் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த மதில் சுவர் உரிமையாளர் சிவ சுப்பிரமணியனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். 17 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் வேதனை அளிக்கிறது.

17 பேர் பலி விவகாரம் – தீண்டாமை சுவர் அமைத்த வீட்டின் உரிமையாளர் கைது..!

இவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள், இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த செய்தி கிடைத்தவுடன் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பேரிடர் நிதியில் இருந்து ரூ.4 லட்சம் இழப்பீட்டை அரசு முதலில் அறிவித்தது.

தற்போது முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.6 லட்சம் சேர்த்து வழங்கப்படும். இதன் மூலம் மொத்தம் ரூ.10 லட்சம் இழப்பீடாக சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படுகிறது. இரண்டாவதாக வீடுகளை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு புதிதாக வீடுகள் கட்டித் தரப்படும்.

மூன்றாவதாக இறந்தவர்களின் குடும்பத்தில் உள்ள தகுதியான நபர்களுக்கு அரசு வேலை வழங்க உத்தரவிட்டுள்ளேன். நாங்கள் பல இடங்களில் ஆய்வு செய்த போது ஏராளமான வீடுகள் ஓட்டு வீடுகளாக இருக்கின்றன. அவர்களுக்கு அரசு சார்பில் வீடுகள் கட்டித் தரப்படும்.

பழிவாங்கிய முன்விரோதம்? இல்லை பலிவாங்கிய பேரிடர்? திண்டிவனத்தில் நடந்த பயங்கரம்!

தமிழகத்தை குடிசை இல்லாத மாநிலமாக மாற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக இலக்கு நிர்ணயித்து கான்கிரீட் வீடுகள் கட்டித் தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். இதையடுத்து தீண்டாமை சுவர் என்று கூறுகிறார்களே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு, இந்த விஷயத்தை பொறுத்தவரை அரசு சட்டப்படி தான் நடவடிக்கை எடுக்கும். சட்டத்தில் என்ன பிரிவு இருக்கிறதோ அதன்படி வழக்குப்பதிவு செய்யப்படும்.

இந்த விஷயத்தில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அரசியல் செய்கிறார். இதுபோன்ற விஷயங்களில் மனிதாபிமான முறையில் செயல்பட வேண்டும் என்று கூறினார்.

கடைசி நேரத்தில் கைவிட்ட விக்ரம்; சரியா குறிவச்ச தமிழன் – டிடிவி தினகரன் பாராட்டு!
Source link

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close
%d bloggers like this: