ஜோதிடம்

Daily horoscope: Today Rasi Palan, December 02: இன்றைய ராசி பலன் (02 டிசம்பர் 2019) – daily astrology 02 december 2019 : today rasi palan in tamil for meenam rishabam simmam mithunam and other signs

Samayam Tamil | Updated:

இன்றைய ராசி பலன்கள் (02 டிசம்பர் 2019): மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி இருக்கிறது என்பதை இங்கு விரிவாக காண்போம்…

​மேஷ ராசி:

நேயர்களுக்கு செய் தொழிலில் வெற்றி காண்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும் குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும். கல்வியில் சற்று கவனம் தேவை. புதிய தொழில் முயற்சிகள் புதிய ஒப்பந்தங்கள் போன்றவற்றை நாளை தள்ளி வைப்பது நல்லது.

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் சற்று காலதாமதம் ஆனாலும் வெற்றிகரமாக முடியும். பெண்களுக்குச் சிறப்பான நாள் ஆகும். குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும்.

பத்திரிக்கைத்துறை விஷுவல் மீடியா போன்றவற்றில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். ஒரு சிலருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்பு உண்டு. வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும்.

அரசுத்துறை காரியங்களில் சற்று கால தாமதம் ஆகலாம். சொத்து விற்பது மற்றும் வாங்குவது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஆதாயம் கிடைக்கும். இடம் மாறுவது சொத்து வாங்குவது போன்ற சிந்தனைகளில் ஈடுபடுவீர்கள்.

Also Read: டிசம்பர் மாத ராசி பலன் 2019

ரிஷபம் ராசி:

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் கணவன் மனைவி ஒற்றுமை மேம்படும். சுபகாரியப் பேச்சுக்கள் வெற்றியடையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல நாள் வேலையில் முன்னேற்றம் காண்பார்கள்.

சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு நல்லதொரு நாளாகும் சிறிய அளவில் பற்றாக்குறை இருந்தாலும் வெற்றிகரமாக எனக்கு கல்வி நன்றாக இருக்கும். வெளிநாடுகளில் வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு உத்தியோகத்தில் முன்னேற்றம் கிடைக்கும்.

பத்திரிக்கை துறை எழுத்துத் துறை மற்றும் கலைத்துறையில் இருப்பவர்களுக்கு நல்லதொரு நாளாக இன்றைய நாள் அமையும். ரியல் எஸ்டேட் கட்டிட தொழில் வாகன தொழில் போன்றவற்றில் இருப்பவர்களுக்கு சற்று கூடுதலான வேலை வாங்கக் கூடிய நாள் இன்றைய நாள்.

Also Read: 537 வருடத்திற்கு பின் ஒரே கட்டத்தில் 6 கிரகங்கள் சஞ்சாரம்… என்ன நடக்கப் போகுது தெரியுமா?

​மிதுனம் ராசி:

உணவுத் தொழிலில் இருப்பவர்களுக்கும் கமிஷன் ஏஜென்சி போன்ற தொழிலில் இருப்பவர்களுக்கும் இன்று வருமானம் நன்றாக இருக்கும். உடல்நலன் நன்றாக இருந்து வரும். ஒரு சிலருக்கு கழுத்து மற்றும் தோள்பட்டை செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் வந்து நீங்கும்.

கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். தனவரவு உண்டு புதிய பிரயாணங்களைப் பற்றி திட்டமிடுவீர்கள். குடும்பத்தோடு அதிக நேரம் செலவழிப்பது காண வாய்ப்பு உண்டு. உங்களுடைய பேச்சிற்கு மதிப்பும் மரியாதையும் சமுதாயத்தில் கூடும்.

மாணவர்களின் கல்வி நன்றாக இருந்து வரும். திருமணம் போன்ற சுப காரியங்களில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். காதல் தொடர்பான விஷயங்களில் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான நாளாகும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு தன வரவு நன்றாக இருக்கும்.

Also Read: சூரிய கிரகணத்தால் பாதிக்கப்பட உள்ள ராசிகள்… எளிய பரிகாரம் இதோ…

கடக ராசி :

இன்றைய நாள் சமமான நாளாக செல்லும். எடுக்கின்ற முயற்சிகள் வெற்றியடையும். வேலை தேடுபவர்களுக்கும், வெளிநாட்டு பிரயாணம் பற்றி திட்டமிட்டு கொண்டிருப்பவர்களுக்கும் நல்ல செய்திகள் கிடைக்கப் பெறும் நாள் ஆகும்.

எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் மருத்துவத்துறை உணவு தொழில் போன்றவற்றில் இருப்பவர்களுக்கு இன்றைய நாளில் சிறப்பானதொரு உயர்வைக் காண்பார்கள். கடன் பிரச்சினைகள் சற்றே மனதில் கவலையை ஏற்படுத்தினாலும் அவற்றை வெற்றிகரமாக சமாளிப்பீர்கள்.

நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் உண்டு. மாணவர்களுக்கு கல்வியில் கவனம் தேவை. வணிகவியல் இயந்திரவியல் தொழில் போன்றவற்றில் உள்ளவர்களுக்கு சற்று கவனம் கூடுதலாக தேவை. விநாயகப் பெருமானை வழிபடவும்.

​சிம்ம ராசி:

நண்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமையும் நாளின் முற்பகுதியில் அலைச்சல் அதிகமாக இருந்தாலும் வெற்றிகரமாக எதிர்கொண்டு நன்மை அடைவீர்கள். தனவரவு உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் வெளியூர் மற்றும் வெளிநாட்டு பிரயாணங்கள் தொடர்பான நல்ல செய்திகள் வந்து சேரும்.

வேலை தேடுபவர்களுக்கு நாளின் முற்பகுதியில் நல்ல பலன் கிட்டும். புது தொழில் முயற்சிகள் எடுப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். எதிர்பார்த்த பணம் வரும் போட்டி பந்தயம் லாபம் தருவதாக அமையும். நண்பர்கள் மற்றும் சுற்றத்தார்கள் அனுகூலம் உண்டு.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உத்தியோக உயர்வு காண சுமூகமான சூழ்நிலை நிலவும். வேலையில் நல்ல பெயர் கிடைக்கும். சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் வெற்றி உண்டு.

கன்னி ராசி

நண்பர்களுக்கு இன்றைய நாள் சந்தோஷத்தைக் கொடுக்கக் கூடிய நாளாக அமையும் செய்யும் தொழிலில் முன்னேற்றம் உண்டு. உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குடும்ப ஒற்றுமை மேம்படும். பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள் நல்ல நாளாகும்.

குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும். புது சொத்துக்கள் வாங்குதல் அல்லது வீடு கட்டுவது வெளிநாடு செல்வது போன்ற சிந்தனைகள் மனதை ஆட்கொள்ளும் இவற்றில் வெற்றியும் காண்பீர்கள். சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும்.

சொத்து தொடர்பான சிந்தனைகளும் செயல்பாடுகளும் நன்மையில் முடியும். ஒரு சிலருக்கு வலி நல்லது.முதுகு வலி சிறிய அளவில் வந்து செல்லும் தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் மருத்துவ துறையில் இருப்பவர்கள் சற்று கவனமுடன் நடந்து கொள்வது நல்லது. பத்திரிக்கைத்துறை கலைத்துறை மற்றும் அரசியலில் இருப்பவர்களுக்கு இன்றைய நாள் இனிய நாள் ஆகும்.

​துலாம் ராசி:

நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக செல்லும். வியாபாரம் சேவைத் தொழில் பத்திரிகைத் தொழில் கலைத்துறை வாகன தொழில் அரசு நிர்வாகம் போன்றவற்றில் இருப்பவர்களுக்கு நல்லதொரு நாளாக இன்றைய நாள் அமையும்.

தாங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் முற்பகலில் வெற்றி அடையும். பிற்பகலில் சற்று காலதாமதம் ஏற்பட வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது பேச்சில் கவனம் தேவை. குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும் கல்வியில் முன்னேற்றம் உண்டு.

புதிய கல்லூரி சேர்க்கைகள் விரும்பியவாறு கிடைக்க ஏதுவான நாளாக இன்றைய நாள் அமைகிறது. மருந்து மருத்துவம் ஷேர் மார்க்கெட் போன்றவற்றில் இருப்பவர்களுக்கு நாளின் பிற்பகுதி நன்றாக இருக்கும். பெண்களுக்கு நல்லதொரு நாளாகும் காதலில் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சிகரமான நாளாக உள்ளது புது தொழில் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நன்மை உண்டாகும்.

Also Read: ஜோதிடம் அறிவோம்: ஜாதக கட்டமும், ஒவ்வொரு வீட்டுக்கான பலன்கள் என்ன தெரியுமா?

விருச்சிக ராசி

நேயர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். நாளின் பிற்பகுதியில் அலைச்சல் அதிகமாகும். தொழில் ரீதியாக தாங்கள் எடுக்கும். முயற்சிகள் வெற்றியடையும். வெளியூர் மற்றும் வெளி நாட்டில் வேலை தொடர்பான செய்தியை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

நாளின் பிற்பகுதியில் குடும்பத்தில் சற்று நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. பெண்கள் பேச்சில் கூடுதல் கவனம் தேவை வயதானவர்களுக்கு கால் மற்றும் மூச்சு தொடர்பான தொல்லைகள் வந்து செல்ல வாய்ப்பு உண்டு. மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் தேவை.

கல்வி தொடர்பான விஷயங்களுக்காக கூடுதல் அலைச்சல்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. கோபத்தைக் குறைத்து கொள்வது அவசியம் கணவன் மனைவி ஒற்றுமை சீராக இருந்துவரும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் செலவினங்கள் உண்டு உடல் அசதி அதிகமாக இருந்து வரும். தாங்கள் எடுக்கும் முயற்சிகளில் சற்று கால தாமதம் ஆக வாய்ப்புண்டு என்பதால் மனதை ஒரு நிலையில் நிறுத்துவது நல்லது.

​தனுசு ராசி:

கோவில் செல்லுதல் தெய்வப் பணிகள் பற்றிய சிந்தனைகள் ஏற்படும் தனவரவு உண்டு.

கணவன் மனைவி இடையே ஒற்றுமை நிலவும் உடல் நலம் நன்றாக இருந்து வரும் வாகன வகையில் அனுகூலம் உண்டு பத்திரிக்கை துறை எழுத்துத் துறை மற்றும் கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு தங்களுடைய காரியங்கள் சற்று கால தாமதம் ஆக வாய்ப்பு உள்ளது சுய தொழில் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் உண்டு

ஒருசிலருக்கு திடீர் பிரயாணங்கள் ஏற்படலாம் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது மிக நல்லது.

மகர ராசி

இன்றைய நாள் இனிய நாள் ஆகும் மாணவர்களின் கல்வித் திறன் பளிச்சிடும் வெளியூர்களில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள் திருமணம் மற்றும் சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் வெற்றி கிடைக்கும் ஒரு சிலர் குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கி இருப்பர் இவற்றில் நல்ல செய்திகள் கிடைக்க வாய்ப்பு உண்டு.

தொழில் மாற்றத்தைப் பற்றி அல்லது இடமாற்றத்தை பற்றி சிந்திக்கும் நாடாக இன்றைய நாள் அமையும் ஒரு சிலருக்கு வெளிநாட்டிற்கு செல்வதற்கான நல்ல செய்திகள் வந்து சேரும் நாளாகும் தன வரவு உண்டாகும் சொந்த தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டு.

தாய் வழி சொந்தம் வந்ததால் மற்றும் நண்பர்களால் தனவரவும் மன மகிழ்ச்சியும் கிடைக்கும் கணக்குத் துறை உணவுத்துறை மற்றும் சுற்றுலா துறையில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்க வாய்ப்பு உண்டு குழந்தைகளால் மன நிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும் வாகனம் ஓட்ட கற்றுக் கொள்வதற்கு ஆரம்பிக்க நல்ல நாள் ஆகும்.

​​கும்ப ராசி

அன்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமையும் எதிர்பார்த்த பணவரவு உண்டு குடும்பத்தில் அமைதி நிலவும் பிற்பகலில் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது இளைஞர்களுக்கும் இளம்பெண்களுக்கும் புதிய நட்புகள் உருவாகும் உத்தியோகத்தில் நல்ல பெயரை எடுப்பீர்கள் சொந்தத் தொழில் செய்பவர்கள் ஏற்றம் காண்பார்கள்.

சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு ஆதாயம் கிடைக்கும் சுபகாரிய பேச்சு வார்த்தைகள் வெற்றிகரமாக முடியும் மாணவர்களின் கல்வி மேம்படும் உறவினர்கள் வருகை அல்லது நண்பர்களை சந்திப்பது போன்ற மனதுக்கு இனிய நிகழ்ச்சிகள் நடக்கும்.

ஆயில் அண்ட் கேஸ் வங்கித்துறை மருத்துவத்துறை ஆன்மீகம் போன்றவற்றில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு நல்ல நிகழ்வுகள் நடக்கும் பெண்களுக்கு இனிய நாளாக இந்த நாள் அமைந்தாலும் நாளின் பிற்பகுதியில் சற்று விட்டுக் கொடுத்து செல்வது குடும்ப அமைதியே மேம்படுத்தும்.

மீன ராசி

நண்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக வே துவங்கும் சுபகாரிய பேச்சு வார்த்தைகளை ஓரிரு நாட்கள் தள்ளி வைப்பது வெற்றிக்கனியை பெறும் வழியை எளிதாக்கும் கணவன்-மனைவியரிடையே சிறு சிறு பிணக்குகள் வந்து செல்ல வாய்ப்பு உண்டு என்பதால் வார்த்தையை அளந்து பேசுவது நல்லது வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

பெண்களுக்கு பொறுமையைக் கைக் கொள்ளும் நாளாக இன்றைய நாள் அமைகிறது தங்களுடைய பிறந்த வீட்டில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை சற்றே அதிகமானாலும் பாராட்டு பெறும் அளவிற்கு கடின உழைப்பை போட்டு வெற்றி பெறுவீர்கள் வயோதிகர்களுக்கு சற்று உடல் நலக்குறைவு ஏற்பட்டு விலகும்.

மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் தேவை அதிக நேரம் டிவி மொபைல் மற்றும் சோஷியல் மீடியாவில் நேரத்தை செலவழிப்பீர்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களால் அலைச்சலும் செலவுகளும் உண்டாகும் விநாயகப் பெருமான் வழிபாடு விக்கினம் தீர்க்கும்.

Web Title daily astrology 02 december 2019 : today rasi palan in tamil for meenam rishabam simmam mithunam and other signs

(Tamil News from Samayam Tamil , TIL Network)




Source link

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close
%d bloggers like this: