தொழில்நுட்பம்

64 மெகா பிக்சல் டிரிபிள் ரியர் கேமரா கொண்ட Samsung Galaxy A70s இந்தியாவில் அறிமுகம்!

சாம்சங் தனது Galaxy A வரிசையில் Samsung Galaxy A70s வடிவத்தில் மற்றொரு ஸ்மார்ட்போனைச் சேர்த்துள்ளது. இந்தியாவில் அறிமுகமான  Galaxy A70s மூன்று பின்புற கேமரா அமைப்பினைக் கொண்டது. 64-megapixel primary camera-வைக் கொண்டுள்ள சாம்சங் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் ஆகும். புதிய போனில் waterdrop-style notch கொண்டுள்ளது. இதனை Infinity-U display என்று சாம்சங் அழைக்கிறது. புதிய சாம்சங் தொலைபேசியில்  octa-core Qualcomm Snapdragon 675 SoC, 32-megapixel selfie camera, 4,500mAh பேட்டரி மற்றும் in-display fingerprint சென்சார் ஆகியவை பிற முக்கிய விவரக்குறிப்புகள் ஆகும். Samsung Galaxy A70s-ன் பெரும்பாலான விவரக்குறிப்புகளை Samsung Galaxy A70 உடன் பகிர்ந்து கொள்கின்றன.

இந்தியாவில் Samsung Galaxy A70s-யின் விலை, வண்ணங்கள், சலுகைகள்

Samsung Galaxy A70s-ன் 6 ஜிபி + 128 ஜிபியின் அடிப்படை விலை 28,999 ரூபாய். ஸ்மார்ட்போனின் 8 ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ. 30.999. இரண்டு வேரியண்ட்களும் முக்கிய e-retailers, major brick-and-mortar stores, Samsung Opera House, மற்றும் Samsung online store வழியாக நாளை முதல் விற்பனைக்கு வரும். இந்த ஸ்மார்ட்போன் Prism Crush Red, Prism Crush Black, and Prism Crush White ஆகிய வண்ணங்களில் வர உள்ளன.

வெளியீட்டு சலுகைகளைப் பொறுத்தவரை, ரிலையன்ஸ் ஜியோ சிம் கொண்ட Samsung Galaxy A70s வாங்குபவர்களுக்கு ரூ. 198 மற்றும் ரூ. 299 ரீசார்ஜ்கள் (அதிகபட்சம் 12 ரீசார்ஜ்கள்) வழங்கப்படும். இதேபோல், ஏர்டெல் சந்தாதாரர்கள் ரூ. 249 மற்றும் ரூ. 349 ரீசார்ஜ்கள் வழங்கப்படும். கடைசியாக, வோடபோன் மற்றும் ஐடியா சந்தாதாரர்களுக்கு, MyVodafone அல்லது MyIdea apps பயன்படுத்தி ரூ.225 ரீசார்ஜ் செய்வதன் மூலம் ரூ.75 கேஷ்பேக் கிடைக்கும் . அதிகபட்சமாக 50 ரீசார்ஜ்கள் வரை கேஷ்பேக் கிடைக்கும்.

Samsung Galaxy A70s-ன் விவரக்குறிப்புகள்

இரட்டை சிம் (நானோ) கொண்ட Samsung Galaxy A70s, Android 9 Pie-ல் ஒரு UI உடன் இயங்குகின்றன. இது 6.7-inch full-HD+ (1080×2400 pixels) Super AMOLED டிஸ்ப்ளேவுடன் 20: 9 விகிதத்தைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் octa-core Qualcomm Snapdragon 675 SoC-ல் இயக்கப்படுகிறது. இது 6 ஜிபி அல்லது 8 ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, Samsung Galaxy A70s, 4,500 mAh பேட்டரியுடன் 25W ஃபாஸ்ட் சார்ஜிங்கில் வருகிறது.

இமேஜிங் திறன்களைப் பொறுத்தவரை, Galaxy A70-லிருந்து மாற்றப்பட்ட விஷயங்களில் ஒன்றான, 64-megapixel f/1.8 முதன்மை கேமராவுடன் மூன்று பின்புற கேமரா அமைப்பைக் Galaxy A70s கொண்டுள்ளது. மேலும், அமைப்பில் உள்ள மற்ற கேமராக்களில் 8-megapixel ultra-wide-angle shooter மற்றும் 5-megapixel கேமரா ஆகியவை அடங்கும். முன்பக்கத்தில் 32-megapixel f/2.0 selfie shooter உள்ளது.

கூடுதலாக, Samsung Galaxy A70s-ல் 128 ஜிபி ஸ்டோரேஜ், மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் (512 ஜிபி வரை) மற்றும் in-display fingerprint சென்சார் ஆகியவற்றைப் பெறுவீர்கள்.

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.


Source link

Tags
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close
%d bloggers like this: