ஜோதிடம்

2020 புத்தாண்டில் உயர்கல்வி யோகம் – கை நிறைய சம்பளத்தோட யாருக்கு வேலை கிடைக்கும் | 2020 New Year Education and carrier Horoscope Predictions

News

lekhaka-C jeyalakshmi

|

சென்னை: உயர்கல்வி படிக்க வேண்டும். படித்து முடித்த உடன் கேம்பஸ் இண்டர்வியூவில் செலக்ட் ஆகி வேலையில் செட்டில் ஆகி விடவேண்டும் என்றுதான் எல்லோருக்கும் ஆசை உங்கள் ஆசைக்கு நவ கிரகங்களும் கை கொடுத்தால் உங்க லைப் ஆஹா ஓஹோ என்று முன்னேறி விடும். பிறக்கப்போகும் 2020 ஆம் ஆண்டில் எந்த ராசிக்காரர்களுக்கு உயர்கல்வி யோகம் கிடைக்கும் யாரெல்லாம் படிப்பை முடித்து விட்டு வேலையில் செட்டில் ஆவார்கள்,வெளிநாடு வேலை வாய்ப்பு எந்த ராசிக்காரர்களுக்கு அமையும் என்று பார்க்கலாம். 2020ஆம் ஆண்டில் படிப்பிற்காகவும், வேலைக்காகவும் விமானம், கப்பலில் செல்லும் யோகம் கிடைக்கிறது என்று பார்க்கலாம்.

சொந்த ஊரை விட்டு கடல் கடந்து வெளிநாடு செல்ல வேண்டும் என்று பலருக்கும் விருப்பம் இருக்கும். கிரகங்களின் சஞ்சாரம், தசாபுத்தியின் அடிப்படையிலேயே மேற்படிப்பு யோகமும், வெளிநாடு செல்லும் யோகமும் கிடைக்கும். வெளிநாடு செல்லும் யோகத்தினை தீா்மானிக்கும் கிரகங்கள் சந்திரன்,குரு, ராகு, செவ்வாய் இவா்கள் 9 மற்றும் 12 வீடுகளுடன் சோ்ந்திருந்தாலும் தொடா்பு பெற்றிருந்தாலும் வெளிநாடு யோகம் வரும்.

சந்திரன், சுக்கிரன் நீர் கோள்கள். கடல்கடந்த வெளிநாட்டு பயணத்திற்கு அவர்கள் இருவரும் காரணமாகின்றனர். ராகு, சனி காற்றுக்கோள்கள். எனவே இவையும் வெளிநாட்டு பயணத்திற்குக் காரணமாக கோள்கள். இவைகள் மட்டுமின்றி 9ஆம் அதிபதி, 12ஆம் அதிபதிகளின் நிலைமையை பொருத்தும் வெளிநாடு பயணம் அமைகிறது. 2020ஆம் ஆண்டில் சனி, குரு, ராகு கேது

2020ஆம் ஆண்டில் கால புருஷ தத்துவப்படி சனி ஒன்பதாம் இடமான தனுசு ராசியில் இருந்து மகரம் ராசியில் சஞ்சரிக்கப்போகிறார். ஒன்பதாம் வீடான தனுசு ராசியில் குரு சஞ்சரிக்கிறார். மிதுன ராசியில் ராகுவும், தனுசு ராசியில் கேதுவும் சஞ்சரிக்கின்றனர். இந்த கிரகங்களின் சஞ்சாரம் எந்தெந்த ராசிக்கு உயர்கல்வி யோகத்தையும், வெளிநாடு சென்று படிக்கவும், வேலை செய்யும் யோகத்தையும் தரப்போகிறது என்று பார்க்கலாம்.

மேஷம்

மேஷம்

செவ்வாயை அதிபதியாக கொண்ட மேஷ ராசிக்காரர்களுக்கு பிறக்கப்போகும் 2020ஆம் புத்தாண்டு சந்தோஷங்கள் நிறைந்த ஆண்டாக அமையப்போகிறது. ஒன்பதாம் வீட்டில் குரு கேது சனி சஞ்சரிக்கின்றனர். ஆண்டு தொடக்கத்தில் சனிபகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கு மாறுகிறார். பத்தாம் அதிபதி பத்தில் அமரப்போகிறார். இதனால் தொழில் வேலை வாய்ப்பு லாபகரமாக அமையும். அரசு துறைகளில் வேலை செய்பவர்களுக்கு அதி அற்புதமான ஆண்டாக அமையப்போகிறது. சிலருக்கு அரசு வேலைகள் கிடைக்கும். படிக்கும் மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் தேடி வருகிறது. வெளிநாடு சென்று படிக்கும் யோகம் அமைந்துள்ளது. உங்களுக்கு பிடித்த பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உயர்கல்வி படிப்பீர்கள். கடந்த காலங்களில் படிக்க தடை ஏற்பட்டிருந்தவர்களுக்கு இந்த ஆண்டு தடைகள் தாண்டி படிப்பை முடிப்பீர்கள்.

ரிஷபம்

ரிஷபம்

சுக்கிரனை ராசி நாதனாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களே நீங்க பட்ட பாடுகளுக்கு விடிவுகாலம் பிறக்கப் போகிறது. குரு பகவான் ஏழாம் வீட்டில் அமர்ந்துள்ளார் அஷ்டம சனி இடப்பெயர்ச்சியாகி பாக்ய சனியாக ஒன்பதாம் வீட்டில் அமரப்போகிறார். அதிர்ஷ்டம் கைகூடி வரப்போகிறது. தடைபட்டு வந்த காரியங்கள் தடங்கள் இன்றி நிறைவேறும். குருபகவான் 8 ல் அமர்ந்தாலும் ஆண்டு இறுதியில் ஒன்பதாம் வீட்டிற்கு மாறுவதால் நெருக்கடிகள் விலகும். வெற்றிகள் தேடி வரும். வேலையில் இருந்த பிரச்சினைகள் விலகும். சனியின் பார்வையால் பறிபோன வேலைகள் கூட புதிதாக தேடி வரும். மாணவர்களுக்கு படிப்பில் இருந்த மந்தநிலை மாறும். உயர்கல்வி யோகங்கள் தேடி வரும் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு நல்ல மாற்றங்கள் ஏற்படும். படிப்பில் ரொம்ப கவனமாக இருங்க. வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைக்கும். போராட்டங்கள் முடிவுக்கு வரும்.

மிதுனம்

மிதுனம்

புதனை ராசி நாதனாகக் கொண்ட மிதுனம் ராசிக்காரர்களே… எட்டில் சனி எட்டுக்கு அதிபனாக அமர்கிறார். சனி நல்லதே செய்வார். எதையும் தடைகள் செய்தாலும் குருவின் பார்வை உங்க ராசிக்கு கிடைப்பதால் தடைகள் நீங்கும். இந்த ஆண்டில் பிற்பகுதியில் குருவின் சஞ்சாரமும் எட்டாம் வீட்டிற்கு நகர்ந்து சனியோடு இணைகிறார். வேலை அற்புதமாக இருக்கும். பயணங்கள் ஏற்படும். வேலைக்காக வெளியூர் பயணம் ஏற்படும். குடும்பத்தை விட்டு சின்ன பிரிவு ஏற்படும். குரு பகவான் 7ஆம் வீட்டில் அமர்ந்துள்ளார். சனிபகவான் உங்க ராசிக்கு எட்டாம் வீடான அஷ்டம ஸ்தானத்திற்கு போகிறார். உங்க பத்தாம் வீடான மீனம் ராசியின் மீது சனிபகவான் பார்வை விழுகிறது. 2020ஆம் ஆண்டில் புதிய வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கும்.

கடகம்

கடகம்

சந்திரனை ராசி நாதனாகக் கொண்ட கடகம் ராசிக்காரர்களே. கடகம் சவால்கள் நிறைந்த ஆண்டாக இருக்கும். வேலையில் கடின உழைப்பை கொடுக்க வேண்டியிருக்கும். மாற்றம் வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நல்ல நேரம்தான் குரு ஆறாம் வீட்டில் இருப்பதால் உங்களுக்கு போட்டிகளில் வெல்ல ஆர்வம் பிறக்கும். உடல் நலத்தில கவனமாக இருங்க. மாணவர்களுக்கு உற்சாகமான ஆண்டாக அமையும். காரணம் சனிபகவான் பார்வை உங்க ராசியின் மீது விழுகிறது. பாக்ய ஸ்தானத்தின் மீதும் விழுகிறது. குருவின் பார்வை 12ஆம் வீட்டின் மீது விழுவதால் வெளிநாடு யோகம் கூடி வந்துள்ளது. படிப்பிற்காகவும், வேலைக்காகவும் விமானம் ஏறி வெளிநாடு செல்வீர்கள்.

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்கு ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குருபகவான் அமர்ந்துள்ளார். ஆறாம் வீட்டிற்கு சனி பகவான் அமர்கிறார். 2020ஆம் ஆண்டு விபரீத ராஜயோகம்தான். வெற்றிகள் தேடி வரும். வேலையில் எதிர்ப்புகளும் சவால்களும் இருந்தாலும் சமாளிப்பீர்கள். புதிய வேலை கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடங்க முயற்சி செய்வீர்கள். மாணவர்களின் கல்வி அற்புதமாக அமையும். உயர்கல்வி யோகம் தேடி வரும். வெளிநாடு யோகம் வரும். பூர்வ ஜென்ம புண்ணிய பலனால் 2020ஆம் ஆண்டு கல்வி யோகவும், வேலை யோகமும் கூடி வந்து சிம்ம ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்களை தரப்போகிறது.

கன்னி

கன்னி

புதனை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே. 2020ஆம் ஆண்டில் சனி ஐந்தாம் இடத்தில் இருக்கிறார். குரு நான்காம் வீட்டில் சுக ஸ்தானத்தில் இருக்கிறார். 2020ஆம் ஆண்டில் உங்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். காரணம் உங்க பத்தாம் வீட்டிற்கு குருவின் பார்வை கிடைக்கிறது. வருமானம் அதிகரிக்கும். குருவினால் உங்களுக்கு எனர்ஜி அதிகமாகும். மாணவர்களுக்கு கல்வியில் உற்சாகம் ஏற்படும். மறதிகள் நீங்கும். நேர்மறை எண்ணங்கள் அதிகமாகும். உயர்கல்வியை வெற்றிகரமாக முடித்து பட்டதாரியாகத்தான் வெளியே வருவீர்கள். படித்து முடித்தவர்களுக்கு கேம்பஸ் இன்டர்வியூவில் வேலை கிடைக்கும். பிடிக்காத வேலையில் இருப்பவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். 2020ஆம் ஆண்டு பொருளாதார வளம் நிறைந்த ஆண்டாக கன்னி ராசிக்காரர்களுக்கு அமையப்போகிறது.

துலாம்

துலாம்

சுக்கிரனை ராசி நாதனாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே 2020ஆம் ஆண்டு உங்களுக்கு நிதானமான ஆண்டாக இருக்கிறது. அர்த்தாஷ்டம சனி பார்வை உங்க ராசிக்கு கிடைக்கிறது. சனி பகவான் உங்க ராசியில் உச்சமடைபவர் என்பதால் உங்களுக்கு நிறைய நன்மைகள் நடைபெறும். வெளிநாடு பயணங்கள் கை கூடி வரும். குரு பார்வையால் உங்க உடன் பிறந்தவர்களின் திருமணத்திற்கு உதவி செய்வீர்கள். மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். இந்த ஆண்டு நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். வேலை சார்ந்த விசயங்களில் வெற்றி கிடைக்கும். சனிபகவான் பார்வை உங்க ராசியின் மீது விழுகிறது. உங்களுக்கு நல்ல வேலை கிடைப்பதோடு வருமானமும் அதிகம் வரும்.

விருச்சிகம்

விருச்சிகம்

செவ்வாயை அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே, ஏழரை சனி ஜென்ம குருவினால் படாத பாடு பட்ட உங்களுக்கு 2020ஆம் ஆண்டு பெரிய அதிர்ஷ்டங்கள் தேடி வரும். இரண்டாம் வீட்டில் குரு அமர்ந்துள்ளதால் முன்னேற்றங்கள் கிடைக்கும். புத்தாண்டில் மாணவர்களுக்கு சிறப்பான ஆண்டாக அமைகிறது. படித்து பட்டம் பெறுவீர்கள். அதிர்ஷ்டகரமான ஆண்டாக அமைகிறது. சனி பார்வை உங்க ராசிக்கு 12ஆம் வீட்டின் மீது விழுவதால் வெளிநாட்டில் வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கும் வேலை கிடைக்கும்.

தனுசு

தனுசு

குரு பகவானை ராசி நாதனாகக் கொண்ட தனுசு ராசிக்காரங்களே உங்க ராசியில் ராசிநாதன் குரு சனியோடும் கேது உடனும் இணைந்துள்ளார். ஜென்ம குரு இருப்பதால் உங்களுக்கு இருந்த கெடு பலன்கள் குறையும். 2020ஆம் ஆண்டு முதல் ஏழாரை சனியின் கடைசி இரண்டரை ஆண்டுகளை இனி கடக்க வேண்டும். சிலருக்கு மனச்சஞ்சலங்களும் டென்ஷனும் அதிகமாக இருக்கும். எதிலும் நிதானித்து பயனிப்பது நல்லது. புதிய பிசினஸ் சொந்த முதலீடுகள் வேண்டாம். ஆண்டின் இறுதியில் வேலை தொடர்பான புதிய முயற்சிகளுக்கு அனுகூலம் உண்டு. கிடைக்கிற வேலையை கெட்டியா பிடிச்சிக்குங்க.

மகரம்

மகரம்

சனி பகவானை ஆட்சி நாதனாகக் கொண்ட மகரம் ராசிக்காரர்களே. உங்களுக்கு ஏழரை சனி ஜென்ம சனியாக நீடிக்கிறது. உங்க ராசிநாதன் உங்க வீட்டில் அமர்கிறார். கடின உழைப்பு வெற்றியை தரும். உங்க உழைப்புக்கு ஏற்ப பலன் கிடைக்கும். 2020ஆம் ஆண்டில் உங்களுக்கு பாதிப்புகள் குறைந்து நன்மைகள் நடைபெறும். உங்களுக்கு வேலை தொழில் ரீதியாக முன்னேற்றங்களும் நன்மைகளும் ஏற்படும். அரசு வேலைக்கு முயற்சி செய்தாலும் கிடைக்கும், அரசு தேர்வுகளை தைரியமாக எழுதுங்கள். வெளிநாடு வேலைக்கு முயற்சி பண்ணுங்க கண்டிப்பாக கிடைக்கும். வருட மத்தியில் தற்போது பார்த்துக்கொண்டிருக்கும் வேலையை விட பெரிய மல்டி நேசனல் கம்பெனியில் வேலை கிடைக்கும்.

கும்பம்

கும்பம்

சனி பகவானை ஆட்சி நாதனாகக் கொண்ட கும்பம் ராசிக்காரர்களே. சனி 12ஆம் வீட்டிற்கு வருகிறார். உங்க ராசி நாதனும் விரைய ஸ்தான அதிபதியுமான சனி விரைய ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். அதிக வருமானத்துடன் கூடிய புதிய வேலையும் கிடைக்கும்.

இந்த ஆண்டு உங்களுக்கு ஏழரை சனி ஆரம்பிக்கிறது. வேலை செய்யும் இடத்திலும் வார்த்தைகளில் நிதானம் தேவை. குரு லாப ஸ்தானமான 11ஆம் வீட்டில் சஞ்சரிக்கிறார். சிலருக்கு வேலையில் இடமாற்றம் ஏற்படும். பார்க்கிற வேலையில் சம்பள உயர்வு கிடைக்கும். வெளிநாட்டு முயற்சிகள் கைகூடும். வெளிநாட்டில் வசிப்பவருக்கு முன்னேற்றம் ஏற்படும். உங்க ராசிநாதன் சனியும் உங்களுக்கு சாதகமான நிலையில் இருக்கிறார்.

மீனம்

மீனம்

குருவை ராசி நாதனாகக் கொண்ட மீனம் ராசிக்காரர்களே. சனி பகவான் 2020ஆம் ஆண்டில் 11ஆம் வீட்டில் செல்வதால் செய்யும் தொழிலில் லாபம் வரும். புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம் கண்டிப்பாக கிடைக்கும்.லாப சனி, பத்தில் குரு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. வேலை மாற்றம் நிகழும். வேலை மாற்றம் இல்லாதவர்களுக்கு செய்யும் தொழிலிலும் வேலையிலும் சிலருக்கு பிரச்சினைகள் ஏற்படும். செய்யும் தொழிலை விட்டு விட்டு புதிய வேலையை ஏற்றுக்கொள்வது நல்லது. வெளிநாடு யோகம் கை கூடி வரும். 2020ஆம் ஆண்டில் நிறைய நல்லது நடக்கும்.


திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!
Source link

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close