ஜோதிடம்

2020 ஜனவரி முதல் டிசம்பர் வரை மேஷம் ராசிக்கு எந்த மாதம் நல்ல மாதம் | Aries 2020: Yearly horoscope astrology insights by month

News

lekhaka-C jeyalakshmi

|

சென்னை: 2020 ஆண்டில் கிரகங்கள் சஞ்சாரம் ஒரே மாதிரி இருப்பதில்லை. நவகிரகங்களுமே இடப்பெயர்ச்சி ஆகின்றன. சூரியன் 2020ஆம் ஆண்டில் மகரம் ராசியில் தொடங்கி தனுசு ராசியில் முடிக்கிறார். சுக்கிரனும் தனுசு ராசியில் தொடங்கி விருச்சிகம் வரை ஓராண்டுகள் சஞ்சாரம் செய்கிறார். புத பகவான் தனது சஞ்சாரத்தை மகரத்தில் தொடங்கி தனுசு வரை வலம் வருகிறார். செவ்வாய் பகவான் தனுசு ராசியில் தொடங்கி அதிசாரம் வக்ரகதி என சென்று மேஷம் ராசி வரைக்கும் ஓராண்டுகள் சஞ்சரிக்கிறார். குரு தனுசு ராசியில் இருந்து மகரத்திற்கு நகர்கிறார். ராகு ரிஷப ராசிக்கும், கேது விருச்சிக ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைகின்றனர். சனிபகவான் மகரம் ராசியில் சஞ்சரிக்கிறார் அதிசாரமாக கும்ப ராசிக்கு சென்று வருவார்.

இந்த கிரகங்களின் இடப்பெயர்ச்சியால் ஜனவரி முதல் டிசம்பர் வரை மேஷம் ராசிக்காரர்களுக்கு என்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

சபரிமலை யாத்திரை: மதநல்லிணக்கத்தின் அடையாளமான வாபர் சாமி சந்நிதி

ஜனவரி பிப்ரவரி

ஜனவரி பிப்ரவரி

கிரகங்களின் சஞ்சாரம் உங்களுக்கு அற்புதமாக உள்ளது. இந்த மாதம் உங்க எனர்ஜி லெவல் அதிகமாகி உற்சாகத்தை கொடுக்கும். குருவும் சனியும் கூடுதல் தெம்பை தருவார்கள். பிப்ரவரியில் என்னதான் குருவும் சனியும் சந்தோஷத்தை கொடுத்தாலும் உஷ்ண கிரகங்களின் சஞ்சாரத்தினால் மனதில் கோபமும் கொந்தளிப்பும் அதிகமாகும் உடனடியாக நீங்க கோபத்தைக் கட்டுப்படுத்துங்க.

மார்ச் ஏப்ரல்

மார்ச் ஏப்ரல்

இந்த மாதம் கிரகங்களின் சஞ்சாரம் உங்களுக்கு ரொம்ப உற்சாகத்தை கொடுக்கும் குடும்பத்திலும் குதூகலமாக இருக்கும். ஏப்ரல் மாதம் சூரியன் உங்க ராசியில் சஞ்சரிக்கும் மாதம் ரொம்ப கஷ்டமாகத்தான் இருக்கும். உஷ்ணம் தொடர்பான நோய்கள் எட்டிப்பார்க்கும். தேர்வு நேரம் என்பதால் மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தவும்.

மே ஜூன்

மே ஜூன்

மே மாதம் கிரகங்களின் சஞ்சாரம் சில சங்கடங்களை ஏற்படுத்தும். உங்க ரொட்டீன் வாழ்க்கையில் சில சங்கடங்கள் ஏற்படும். ஜூன் மாதம் வெற்றிக்கனியை ருசிப்பீர்கள் காரணம் அதி அற்புதமான மாதம் இது. உடல் ஆரோக்கியமும் அற்புதமாக இருக்கும்.

ஜூலை ஆகஸ்ட்

ஜூலை ஆகஸ்ட்

ஜூலை மாதத்தில் போல்டான விசயங்களை முன் எடுப்பீர்கள். ஆகஸ்ட்டில் சின்னச் சின்ன சங்கடங்களை சந்திக்க வேண்டியிருக்கும். பணத்தையும் விலை உயர்ந்த பொருட்களையும் பத்திரமாக வைக்கவும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தவும்.

செப்டம்பர் அக்டோபர்

செப்டம்பர் அக்டோபர்

செப்டம்பர் மாதம் மன அழுத்தம் தரும் மாதம் காரணம் கிரகங்களின் சஞ்சாரம் சுமாராகத்தான் இருக்கும் எச்சரிக்கை தேவை. அக்டோபர் மாதம் மன அழுத்தம் கொஞ்சம் குறையும் உங்க பார்வையில் கவனம் தேவை. பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

நவம்பர் டிசம்பர்

நவம்பர் டிசம்பர்

நவம்பர் மாதம் ஏற்ற இறக்கம் நிறைந்த மாதம். பணவரவு சுமார்தான். டிசம்பர் மாதம் அதி அற்புதமான மாதம் மனம் அமைதியாக இருக்கும். குடும்பத்தில் குதூகலமாக இருப்பீர்கள் பணவரவும் நன்றாக இருக்கும். உற்சாகமாக இருப்பீர்கள்.


திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!
Source link

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close