ஜோதிடம்

2020 ஆங்கிலப் புத்தாண்டு ராசி பலன்கள்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு பொற்காலம் பிறக்கப் போகிறது | 2020 New year Rasi Palangal Viruchigam Rasi palangal parikarangal

News

oi-C Jeyalakshmi

|

சென்னை: 2020 ஆம் ஆண்டில் நமக்கு புதிய நல்ல வேலை கிடைக்குமா என்று சிலர் யோசிக்கலாம். சில ராசிக்காரர்களோ, திருமணத்திற்கு பெண் பார்க்கலாமா இந்த ஆண்டாவது திருமணம் முடியுமா என்றும் யோசிப்பார்கள். அதே போல இந்த வேலையை விட்டு விட்டு வேறு வேலைக்கு போகலாமா என்றும் யோசித்துக்கொண்டிருப்பார்கள். அவர்களுக்காகவே இந்த புத்தாண்டு பலன்களை தருகிறோம். உங்களின் பல கேள்விகளுக்கும் இந்த புத்தாண்டு பலன்களில் விடை கிடைக்கும். விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு 2020ஆம் ஆண்டு பல தரமான சம்பவங்கள் நடக்கப்போகும் பொற்கால ஆண்டாக அமையப்போகிறது.

2020ஆம் ஆண்டு புத்தாண்டு பிறக்கும் போதே கிரகங்கள் மிதுனத்தில் ராகு, விருச்சிகத்தில் செவ்வாய் தனுசு லக்னம் லக்னத்தில் கேது, குரு, சூரியன், சனி, புதன், மகரத்தில் சுக்கிரன் கும்பத்தில் சந்திரன் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது. விருச்சிக ராசிக்காரர்களுக்கு புத்தாண்டு அருமையான யோக பலன்களையும் நன்மைகளையும் தரப்போகிறது. 2020 புத்தாண்டில் முக்கியமான கிரகப்பெயர்ச்சி சனிப்பெயர்ச்சிதான் ஆண்டின் துவக்கமான ஜனவரியிலேயே தனுசு ராசியில் இருந்து மகரத்திற்கு சனி திருக்கணிதப்படி இடப்பெயர்ச்சி அடைகிறார்.

விருச்சிக ராசிக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக கஷ்டம்தான். இனி கஷ்டங்கள் தீரும் காலம் பிறக்கப் போகிறது. இரண்டாம் வீட்டிற்கு குரு சென்றிருப்பதால் குடும்ப வாழ்க்கை குதூகலமாக இருக்கும். புத்தாண்டில் புதிய வேலை கிடைக்கும். அதனால் வருமானம் அதிகரிக்கும். இழந்தை மீட்கும் அளவிற்கு வருமானம் கிடைக்கும். ஏழரை சனி முடிவதால் நன்மைகள் அதிகம் நடக்கும் ஆண்டாக அமையப்போகிறது.

கஷ்டங்கள் தீரும்

கஷ்டங்கள் தீரும்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு 2020ஆம் புத்தாண்டு மனதிற்கு மகிழ்ச்சி தரும் ஆண்டாக அமையப்போகிறது. யோகமான மனிதராக மாறுவீர்கள். ஏழரை சனி உங்களை விட்டு விலகப்போகிறது. நீங்க பட்ட அவமானங்களுக்கு முடிவு வரப்போகிறது. குடும்பத்தில் குழப்பம், வேலை செய்யும் இடத்தில் பிரச்சினை, சொந்தக்காரங்க மத்தியில மதிப்பில்லாம போனது என ஏகப்பட்ட பிரச்சினை இருந்தது. ராசி நாதன் செவ்வாய் ஆட்சி நாதனாக அமைந்து புத்தாண்டு தொடங்குகிறது. சத்ரு சம்ஹார யோகம். எதிரிகள் தொல்லை ஒழியும். வலிமை அதிகரிக்கும். தைரியமான மனிதராக காட்சியளிப்பீர்கள்.

கடந்த ஏழரை ஆண்டுகளாக அடிபட்டு அடிபட்டு ரணமாகி எதையும் தாங்கும் வலிமை மிக்க இதயத்தை கொடுத்திருக்கும்.

விடிவுகாலம் பிறக்கும்

விடிவுகாலம் பிறக்கும்

கடந்த ஏழு ஆண்டுகளாக கடன் பிரச்சினையில் சிக்கித்தவித்தவர்களுக்கு இது விடிவுகாலத்தை தரப்போகிறது. கடன்கள் அடைபடும் அளவிற்கு வருமானம் வரும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும் உங்களுக்கு புத்தாண்டு பொற்காலமாக அமையப்போகிறது. தொட்டது துலங்கும் துயரங்கள் நீங்கும் புத்தாண்டாக 2020ஆம் ஆண்டு அமையப்போகிறது. யாராக இருந்தாலும் கோபப்படாதீங்க. கோபத்தோடு எழுபவர்கள்தான் நஷ்டத்தோடு உட்காருவார்கள்.

பிள்ளை பாக்கியம் கிடைக்கும்

பிள்ளை பாக்கியம் கிடைக்கும்

திருமண வாழ்க்கை அற்புதமாக இருக்கும். காதல் திருமணமோ, நிச்சயிக்கப்பட்ட திருமணமோ நல்லமுறையில் நடக்கும். பத்து பொருத்தமும் அமைஞ்ச மன வாழ்க்கை அமையும். திருமணம் முடிந்து குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமண வயதில் இருக்கும் பிள்ளைகளுக்கு திருமணம் கூடி வரும். உங்களுக்கு இருந்த தோஷங்கள் எல்லாம் 2020ஆம் ஆண்டு நீங்கிவிடும்.

தலைமை பதவி தேடி வரும்

தலைமை பதவி தேடி வரும்

பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கை அதிகரிக்கும். அடமானத்திற்கு போன நகைகளை எல்லாம் திருப்புவீர்கள். சமூகத்தில் மதிப்பு மரியாதை கூடும். தம்பதி சமேதராக நீங்க ஆன்மீக பயணம் செல்வீர்கள். அலுவலகத்தில் உயர்ந்த பதவிகள் கிடைக்கும். வங்கி மேலாளர்கள், கல்வி நிலையங்களில் தலைமை பதவிகளில் வகிக்கும் அளவிற்கு பதவிகள் தேடி வரும்.

சுகமான 2020

சுகமான 2020

உடல் நலத்திலும் ஏகப்பட்ட தொந்தரவு இருந்தது. உங்க ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும், நோய்கள் தீரும். குருவின் பார்வை உங்க ராசிக்கு ஆறாவது வீட்டின் மீது விழுவதால் உங்க நோய்கள் எல்லாம் இருந்த இடம் இல்லாம போயிரும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். பிசினஸ் பண்றவங்க நம்பி முதலீடு பண்ணுங்க இனி எல்லாம் சுகமே அப்படிங்கிறமாதிரி ஆண்டாக 2020ஆம் ஆண்டு அமையப்போகிறது.

பரிகாரம்

பரிகாரம்

மாணவர்கள் தடுமாறி வந்தீர்கள். இந்த ஆண்டு கல்வியில் அற்புதமாக இருக்கும். உயர்கல்வியில் அரியர் இன்றி முடிப்பீர்கள். படித்து முடித்தவர்களுக்கு கேம்பஸ்ல வேலை கிடைக்கும் அளவிற்கு நல்ல யோகம் தேடி வருகிறது. தன வரவும் கிடைக்கும். முருகப்பெருமானின் அருள் விருச்சிக ராசிக்காரர்களுக்கு கிடைக்கிறது. குடும்பத்தோடு ஒருமுறை சூரனை சம்ஹாரம் செய்த சுப்ரமணியரை திருச்செந்தூர் சென்று தரிசனம் செய்து விட்டு வாருங்கள் பொற்காலத்தை உருவாக்கும். உங்க இஷ்ட தெய்வத்தின் பெயரை அடிக்கடி சொல்லுங்க. நல்லது நிறைய நடக்கும்.


திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!
Source link

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close