இந்தியா

2 நாளில் ரூ.29,000 கோடி.. மகிழ்ச்சியின் உச்சத்தில் அம்பானி குடும்பம்..! | Mukesh Ambani gets richer by Rs 29,000 crore in 2 days!

தொடர் முதலீடு

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 42வது வருடாந்திர கூட்டத்தில் வெளியிட்ட அறிவிப்புகள் முதலீட்டாளர்களுக்குச் சாதகமாக மட்டுமல்ல வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதனால் உள்நாட்டு முதலீட்டாளர்கள் முதல் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வரையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் தொடர்ந்து முதலீடு செய்து வருகின்றனர்.

பங்கு விலை உயர்வு

வருடாந்திர கூட்டத்திற்கு முன் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகள் 1,162 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது 1,288 ரூபாய் வரையில் உயர்ந்து வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

29,000 கோடி ரூபாய்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 45 சதவீத பங்குகள் முகேஷ் அம்பானி குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் காரணத்தால், இந்தத் திடீர் பங்கு விலை உயர்வின் மூலம் மூலம் கடந்த 2 நாட்களில் மட்டும் முகேஷ் அம்பானியின் மொத்த சொத்து மதிப்பு 4 பில்லியன் டாலர் அதாவது கிட்டதட்ட 29,000 கோடி ரூபாய் உயர்ந்துள்ளது.

உலகப் பணக்காரர்

இதன் எதிரொலியாக உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி தற்போது 13வது இடத்தைப் பிடித்துள்ளார். இவரது மொத்த சொத்து மதிப்பு 49.9 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 2 நாட்களில் 29,000 கோடி ரூபாய் வரையில் உயர முக்கியக் காரணமாக அமைந்திருந்தது வருடாந்திர கூட்டத்தின் அறிவிப்புகள் தான்.

75 பில்லியன் டாலர்

சவுதி ஆராம்கோ முதலீடும் செய்யும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பெட்ரோல் மற்றும் பெட்ரோ கெமிக்கல் வர்த்தகத்தின் மதிப்பு 75 பில்லியன் டாலர். இது இப்பிரிவின் கடன் நிலுவையும் சேர்த்து மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆராம்கோ வாங்கும் 20 சதவீத பங்குகளின் மதிப்பு 15 பில்லியன் டாலர்.

நியூ காமர்ஸ்

இந்தியா முழுவதிலும் இருக்கும் 3 கோடி மளிகை கடைகளை மக்களோடும், உற்பத்தி நிறுவனங்களோடு நேரடியாக இணைக்கும் ஆப்லைன்-டூ-ஆன்லைன் வர்த்தகத் தளத்தை உருவாக்கிய 700 பில்லியன் டாலர் சந்தையில் தான் ஆதிக்கம் செலுத்த வேண்டும் எனத் திட்டமிட்டுள்ளார்.

இத்திட்டத்திற்கு நியூ காமர்ஸ் என்றும் முகேஷ் அம்பானி பெயர் வைத்துள்ளார்

700 ரூபாய் திட்டம்

ஜியோ ஜிகா பைபர் திட்டத்தின் கீழ், 100 எம்பிபிஎஸ் வேகம் கொண்ட இணையச் சேவைகள் மாதம் 700 ரூபாய் முதல் பிராண்ட்பேன்ட் சேவை துவங்கும் என அறிவித்துள்ளார். இது சந்தையில் இருக்கும் போட்டி நிறுவனங்களின் கட்டணத்தை விட அது மிகவும் குறைவு.

பர்ஸ்ட் டே ஷோ

2020-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ ஜிகா பைபர் ப்ரீமியம் திட்டத்தின் வழியாக, சினிமா ரிலீஸ் ஆகும் முதல் நாளிலேயே சினிமா திரை அரங்குகளில் ஓடும் படத்தை, ஜியோ ஜிகா பைபர் வழியாக ஒளிபரப்ப இருப்பதாகச் சொன்னார் முகேஷ் அம்பானி.

20% பங்குகள் விற்பனை

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் அஸ்திவாரமான பெட்ரோல் மற்றும் பெட்ரோ கெமிக்கல் வர்த்தகப் பிரிவிலிருந்து யாரும் எதிர்பார்க்காத வகையில் சுமார் 20 சதவீத பங்குகளை விற்பனை செய்ய ஒப்புக்கொண்டு உள்ளார்.

இதுநாள் வரையில் முகேஷ் அம்பானி தான் இருக்கும் துறையிலும், நிறுவனத்திலும் தான் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் முதல் முறையாக அன்னிய நிறுவனத்திற்கு வழி விட்டுள்ளார்.

1.54 லட்சம் கோடி

அம்பானியின் கணக்குப் படி தற்போது அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் அனைத்தும் சிறப்பாக நடந்தால் Reliance நிறுவனத்தின் பெயரில் இருக்கும் 1.54 லட்சம் கோடி ரூபாய் அளவிலான கடனை அடுத்த 18 மாதங்களில் தீர்க்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.


Source link

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close