இந்தியா

₹6 லட்சம் கோடி மதிப்பிலான 10 லட்சம் வீடுகள் விற்பனையாகாமல் தேக்கம் | 10 lakh homes, not sold, stagnation

புதுடெல்லி: நடுத்தர குடும்பத்தினர் நகரங்களில் வீடு வாங்குவது என்பது எட்டாக்கனியாகவே இருக்கிறது. இந்த நிலை கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்கிறது என ரிசர்வ் வங்கி சமீபத்தில் ஓர் ஆய்வறிக்கை வெளியிட்டது. இந்நிலையில், நாடு முழுவதும் முக்கிய 7 நகரங்களில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட 10 லட்சம் வீடுகள் விற்பனையாகாமல் தேங்கியுள்ளதாக கட்டுமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு ₹6 லட்சம் கோடி. இதில் ₹2 கோடி முதல் ₹10 கோடி வரையிலான அடுக்குமாடி சொகுசு குடியிருப்புகளும் அடங்கும். அதிகபட்சமாக மும்பையில்தான் 60 சதவீத வீடுகள் விற்பனையாகாமல் உள்ளன. இதற்கு அடுத்ததாக பெங்களூரு, டெல்லி, சென்னையில் வீடு விற்பனை படு மந்தமாக உள்ளது. இந்த ஆண்டில் கடந்த ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான 6 மாதங்களில் மட்டும் மும்பை, பெங்களூரு, டெல்லி, சென்னை உட்பட முக்கிய 7 நகரங்களில் புதிதாக 1,39,500 வீடுகள் கட்டப்பட்டன. இதில் ₹2 கோடிக்கு மேல் மதிப்பிலான 8,120 வீடுகள் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.


Source link

Show More

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close
%d bloggers like this: