இந்தியா

வோடாஃபோனின் அடுத்த அதிரடி.. – புதிய அசத்தல் ப்ளான் அறிமுகம்..!

ஜியோ நெட்வொர்க் அறிமுகமான சமயத்தில் அனைத்து நெட்வொர்க்குகளும் பெருத்த அடிவாங்கின.

ஏர்செல் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் திவாலாகி இழுத்துமூடும் நிலை ஏற்பட்டது. ஆனால் ஏர்டெல், வோடாஃபோன் உள்ளிட்ட ஒரு சில நெட்வொர்க்குகள் தாக்குப்பிடித்து தனது இருப்பிடத்தை தக்கவைத்துக்கொண்டனர்.

இந்த நிலையில் சமீபத்தில் ஜியோ நெட்வொர்க் தனது புதிய அறிவிப்பில் இனி ஜியோ டூ ஜியோ மட்டும் ஃப்ரீ மற்ற அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் நிமிடத்திற்கு 6 பைசா என்ற  ப்ளானை அறிவித்தது.

இந்த அறிவிப்பால் ஜியோ வாடிக்கையாளர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர். இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ஏர்டெல், வோடாஃபோன் உள்ளிட்ட நிறுவனங்கள் தாங்கள் ப்ளான்களில் எந்த மாற்றமும் இல்லை என அறிவித்து புதிய ப்ளான்களையும் அறிவித்து வருகிறது.

வோடபோன் நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 69 விலையில் புதிய சலுகையை அறிவித்துள்ளது.

இச்சலுகை வோடபோனின் ஆல் ரவுண்டர் சலுகைகளில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது. வோடபோன் நிறுவனம் ஏற்கனவே இதேபோன்ற சலுகையை ரூ. 45 விலையில் அறிவித்திருந்தது.

தற்சமயம் வோடபோன் வழங்கி வரும் ரூ. 35, ரூ. 65, ரூ. 95, ரூ. 145 மற்றும் ரூ. 245 சலுகைகளுடன் புதிய சலுகையும் இணைந்திருக்கிறது. புதிய ரூ. 69 சலுகை அறிவிக்கப்பட்டதும் சில வட்டாரங்களில் ரூ. 65 சலுகை நீக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

புதிய ரூ. 69 சலுகையில் வாய்ஸ் கால் சேவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக இச்சலுகை ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, பீகார், ஜார்கண்ட், டெல்லி போன்ற வட்டாரங்களில் மட்டுமே வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

வாய்ஸ் கால் சேவையை தவிர 150 லோக்கல், எஸ்.டி.டி. அல்லது ரோமிங் நிமிடங்கள், 250 ஜி.பி. 4ஜி அல்லது 2ஜி டேட்டா மற்றும் 100 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது.

புதிய சலுகையை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் தங்களது இணைப்புக்கான வேலிடிட்டியை அதிகப்படுத்திக் கொள்ள முடியும். இதன் வேலிடிட்டி 28 நாட்களில் துவங்கி அதிகபட்சம் 84 நாட்கள் வரை வழங்கப்படுகிறது.

பெரும்பாலான ஆல் ரவுண்டர் சலுகைகளை கொண்டு பயனர்கள் அதிக செலவின்றி தங்களின் சேவைக்கான வேலிடிட்டியை அதிகரித்துக் கொள்ள முடியும்.
Source link

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close
%d bloggers like this: