tamil top stories

வீடியோ விவகாரம்:உச்சநீதிமன்றத்தில் காங்., மனு | Dinamalar

பெங்களூரு: கர்நாடகத்தில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட, எம்.எல்.ஏ.,க்கள் குறித்து, முதல்வர் எடியூரப்பா பேசிய, ‘வீடியோ’ தொடர்பாக, காங்கிரஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில், முதல்வர் எடியூரப்பா தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, முந்தைய ம.ஜ.த., – காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது, ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, அக்கட்சிகளின், 17 எம்.எல்.ஏ.,க்கள், தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

http://feedproxy.google.com/

விசாரணை

பின், அப்போதைய கர்நாடக சட்டசபை சபாநாயகர் ரமேஷ்குமார், அவர்களை தகுதி நீக்கம் செய்தார்.சபாநாயகரின் முடிவை எதிர்த்து, தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். விசாரணையின் போது, இடைத்தேர்தலில் தங்களை போட்டியிட அனுமதிக்க வேண்டுமென, எம்.எல்.ஏ.,க்கள் வலியுறுத்தினர்.

பணம், பதவிக்காக

ராஜினாமா செய்ததால், அவர்களை இடைத்தேர்லில் போட்டியிட அனுமதிக்க கூடாது என, காங்கிரஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இவ்வழக்கு மீதான விசாரணை, முடிந்து, தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அக்., 26 ல் நடந்த, பா.ஜ., கூட்டத்தில், ‘தகுதி நீக்க, எம்.எல்.ஏ.,க்கள், தங்கள் பதவியை ராஜினாமா செய்ததால் தான், கர்நாடகாவில் நாம் ஆட்சியை பிடிக்க முடிந்தது.அவர்கள் மும்பையில் தங்கியிருந்தது, பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷாவுக்கும் தெரியும்’ என, முதல்வர் எடியூரப்பா பேசிய, ‘வீடியோ’ காட்சிகள், சமூக வலை தளங்களில் பரவி வருகிறது.

இந்த வீடியோவை, தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள, காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இதையடுத்து, காங்., தரப்பில், வழக்கறிஞர் கபில் சிபில், உச்சநீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்து, “http://feedproxy.google.com/”முதல்வர் எடியூரப்பா வீடியோ குறித்து, தனி அமர்வில் விசாரணை நடத்த வேண்டும். தகுதி நீக்க, எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா விஷயத்தில், புது தகவல் வெளியாகியுள்ளது,”http://feedproxy.google.com/”என்றார்.

பிரச்னை

இம்மனுவை ஏற்ற, நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு, ‘உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டால், நாளையே (இன்று) விசாரிக்கப்படும்’ என்றார்.ஒரு வேளை, தலைமை நீதிபதி அனுமதி கொடுத்தால், வீடியோ பிரச்னை மீது விவாதம் நடத்தப்பட வாய்ப்புள்ளது. அப்போது, டிசம்பர், 5 ம் தேதி, 15 சட்டசபை தொகுதிகளுக்கு நடக்கவுள்ள சட்டசபை இடைத்தேர்தல், ஒத்தி வைக்கப்படும் வாய்ப்புள்ளது. அதே நேரத்தில், தகுதி நீக்க எம்.எல்.ஏ.,க்கள் தொடர்ந்த வழக்கில், தீர்ப்பு வரவும் தாமதமாகலாம்.

Advertisement


Source link

Tags
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close
%d bloggers like this: