சமையல் வீடியோக்கள்

வட பாவ் | Vada Pav In TamilWe also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe

வட பாவ் | Vada Pav In Tamil

தேவையான பொருட்கள்

உருளைகிழங்கு நிரப்புவதற்கு

எண்ணெய் – 2 தேக்கரண்டி
கடுகு – 1/4 தேக்கரண்டி
அரைத்த (இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாய்)
வேகவைத்த உருளைக்கிழங்கு – 4
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
உப்பு
கொத்தமல்லி இலை

மாவு தயாரிக்க

கடலை மாவு – 1 கப்
உப்பு
மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள்
சமையல் சோடா
தண்ணீர்

பூண்டு சட்னி தயாரிக்க

தேவையான பொருட்கள்

எண்ணெய் – 1 தேக்கரண்டி
பூண்டு – 12 பற்கள்
துருவிய தேங்காய் – 1/2 கப்
வெள்ளை எள் – 1 தேக்கரண்டி
வேர்க்கடலை – 1 தேக்கரண்டி
உப்பு
காஷ்மீர் மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி

#வடபாவ் #VadaPav #StreetFood

செய்முறை

1. வட பாவ் தயாரிக்க முதலில் இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் ஆகியவற்றை ஒரு குத்து கல்லில் இடித்து மசாலா விழுது போல் அரைக்கவும்
அடுத்து ஒரு கடாயில் எண்ணெய், கடுகு, அரைத்த இஞ்சி பூண்டு & பச்சை மிளகாய் விழுது, நான்கு வேகவைத்த உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு வதக்கவும்
3. இந்தக் கலவையில் தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கலக்கவும்
4. அடுத்து ஒரு கிண்ணத்தில் கடலைமாவு, உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு கலக்கி வைக்கவும், சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்துக் கொள்ளவும்
5. அடுத்து செய்து வைத்த உருளைக்கிழங்கு கலவையை சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும் 6. உருட்டி வைத்த உருளைக்கிழங்கு உருண்டையை கரைத்த கடலை மாவில் நன்கு முக்கி எடுத்துக் கொள்ளவும்
7. அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடு ஏற்றிய பிறகு இந்தபோண்டா கலவையை சேர்த்து நன்கு பொன்னிறமாக பொரிக்கவும்
8. அடுத்து பாகு பன்னை எடுத்து அதன் மையத்தில் இரண்டு துண்டுகளாக வெட்டி நடுவில் புதினா சட்னி, பூண்டு தேங்காய் சட்னி மற்றும் செய்து வைத்த போன்றவை நடுவில் வைத்து மூடி வைக்கவும்
9. சுவையான மற்றும் எளிமையான வட பாவ் தயார்

source

Tags
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close
%d bloggers like this: