இந்தியா

ரூ.6 லட்சம் அபராத தொகையை கட்ட மறுக்கும் கட்டுமான நிறுவனம்| Dinamalar

கோடம்பாக்கம் : ‘டெங்கு’ கொசு உற்பத்தியாகும் விதமாக, பாதுகாப்பற்ற முறையில் இருந்த கட்டுமான நிறுவனத்திற்கு, 6 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தும், கட்ட மறுப்பதாக புகார் எழுந்துள்ளது.

டெங்கு கொசு உற்பத்தியாகும் விதம் உள்ள, புது கட்டடங்கள் மற்றும் கடைகளுக்கு, மாநகராட்சி சுகாதாரத் துறை சார்பில், அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.இதில், கோடம்பாக்கம் மண்டலம், 129வது வார்டு, சாலிகிராமம், ஆற்காடு சாலையில், பிரபல கட்டுமான நிறுவனம் சார்பில், அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது.இங்கு, டெங்கு கொசு உற்பத்தியாகும் விதமாக, பாதுகாப்பற்ற முறையில் இருந்ததால், சில வாரங்களுக்கு முன், மாநகராட்சி சுகாதார துறை சார்பில், 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

ஆனால், அந்த நிறுவனம் அபராத தொகையை கட்டாததுடன், டெங்கு கொசு உற்பத்தியாகும் விதம் தேங்கியிருந்த தண்ணீரை அகற்றவில்லை.இதையடுத்து, மாநகராட்சி உயர் அதிகாரிகள், இரண்டு நாட்களுக்கு முன், அடுக்குமாடி கட்டுமானம் நடக்கும் பகுதியை ஆய்வு செய்தனர்.அப்போது, டெங்கு கொசு புழுக்கள் இருந்ததால், 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால், அபராத தெகையை, கட்டுமான நிறுவனம் கட்ட மறுத்து வருவதாக, சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


Source link

Tags
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close
%d bloggers like this: