முக்கியச் செய்திகள்

முதல் டெஸ்ட்: இலங்கை அபார வெற்றி- Dinamani

spt4

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இலங்கை.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் ஒரு பகுதியாக 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் இலங்கையில் நடந்து வருகிறது. காலேயில் நடைபெற்று வரும் முதல் ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்து 249 ரன்களுக்கும், இலங்கை 267 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
2ஆவது இன்னிங்ஸில் நியூஸிலாந்து அணி 285 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின்னர் 2-ஆவது இன்னிங்ûஸ தொடங்கிய இலங்கை அணி நான்காம் நாளான சனிக்கிழமை ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 133 ரன்களை எடுத்திருந்தது.
வெற்றிக்கு 135 ரன்கள் தேவை என்ற நிலையில் ஞாயிற்றுக்கிழமை களமிறங்கியது. கேப்டன் கருணரத்னே, லஹிரு களமிறங்கினர். 86.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 268 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது இலங்கை. 
திமுத் கருணரத்னே அபார சதம்: 1 சிக்ஸர், 6 பவுண்டரியுடன் 243 பந்துகளில் 122 ரன்களை எடுத்து அவுட்டானார் கருணரத்னே. லஹிரு 64 ரன்களை எடுத்து வெளியேறினார். இருவரும் இணைந்து 133 ரன்களை சேர்த்து வெற்றிக்கு வித்திட்டனர். குஸால் மெண்டிஸ் 10, குஸால் பெரைரா 23 ரன்களுக்கு அவுட்டாயினர். ஏஞ்சலே மேத்யூஸ் 28, தனஞ்செய டி சில்வா 14 ரன்களுடன் களத்தில் இருந்தனர். நியூஸி தரப்பில் பெளல்ட், டிம் செளதி, சாமர்வில்லே, அஜாஸ் பட்டேல் தலா 2 விக்கெட்டை சாய்த்தனர். இதையடுத்து 1-0 என இலங்கை முன்னிலை பெற்றுள்ளது. 
Source link

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close
%d bloggers like this: