அரசியல்

“முதல்வர் பதவிக்காக சுயமரியாதையை இழக்க மாட்டேன்” – ஸ்டாலின்

முதலமைச்சர் பதவியை அடைவதற்காக ஒருபோதும் சுயமரியாதையை இழக்க மாட்டேன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை திமுக எம்எல்ஏ பெரியண்ணன் அரசுவின் இல்லத் திருமண விழாவில் ஸ்டாலின் கலந்து கொண்டார். காங்கிரஸ் எம்பி‌ திருநாவுக்கரசர், திமுக முன்னாள் அமைச்சர்கள், பாஜக மாநில துணைத்தலைவர் பி.டி.அரசகுமார் உள்ளிட்டோரும் விழாவில் பங்கேற்றனர். திருமணத்தை நடத்தி வைத்த மு.க.ஸ்டாலின், பின்னர் உரையாற்றினார். 

அப்போது, உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த திமுக முயல்வதாக அதிமுக அரசு பொய்யுரைப்பதாக கூறிய ஸ்டாலின், இடஒதுக்கீடு உள்ளிட்ட அம்சங்களை முறையாக நிறைவேற்றி உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்பதே திமுகவின் நோக்கம் என்று விளக்கமளித்தார். முதல்வர் பதவி கனவில் தாம் மிதப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறி வருவதாக ஸ்டாலின் சுட்டிக்காட்டினார். ஆனால், முதல்வர் பதவிக்காக ஒருபோதும் தாம் சுயமரியாதையை இழக்க மாட்டேன் என்று ஸ்டாலின் கூறினார்.


Source link

Tags
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close
%d bloggers like this: