தமிழகம்

நீதிமன்ற தீர்ப்புக்காக கட்சிகள்… காத்திருப்பு! சூடு பிடிக்காத உள்ளாட்சி தேர்தல்| Dinamalar

கடலுார் : தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், வேட்பு மனு தாக்கல் நாளை துவங்குகிறது. அரசியல் கட்சி சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் கோர்ட் தீர்ப்புக்காக காத்திருப்பதால் தேர்தல் சூடுபிடிக்காமல் மந்த கதியில் உள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வரும் 27, 30 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என அறிவித்துள்ளது. கடலுார் மாவட்டத்தை பொறுத்தவரை 5,040 சிற்றுாராட்சி வார்டு உறுப்பினர்கள், 287 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 29 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 683 ஊராட்சி தலைவர்கள் என 6,039 பதவி இடங்களுக்கு தேர்தல் நடத்தப்படவுள்ளது.

கடந்த முறை நடந்த உள்ளாட்சி தேர்தலின்போது, அ.தி.மு.க., தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்றது. சில இடங்களில் பா.ம.க., – தே.மு.தி.க., – வி.சி., சுயேச்சைகள் வெற்றி பெற்றன.இந்நிலையில், ஆளும் அ.தி.மு.க., வோடு, பா.ஜ., பா.ம.க, தே.மு.தி.க., தா.ம.கா., உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து கடந்த லோக்சபா தேர்தலை சந்தித்தன. இந்த கூட்டணி இடைத்தேர்தலிலும் தொடர்ந்தது.

இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடரும் என அ.தி.மு.க., கட்சி மேலிடம் கூறியுள்ளது. அதன்படி கூட்டணி கட்களுக்கு எத்தனை வார்டு என்பதும், எந்தெந்த வார்டு என்பதும் இதுவரை முடிவாகவில்லை. கூட்டணி கட்சிகளிடம் இன்னும் பேச்சுவார்த்தையே துவங்கப்படவில்லை. வரும் தேர்தலில் சேர்மன்களையும் கவுன்சிலர்கள் ஓட்டெடுப்பின் மூலம் தேர்ந்தெடுக்கும் முறை கொண்டுவரப்பட்டுள்ளது. புதிய முறைப்படி சேர்மன் பதவியில் போட்டியிடுபவர்கள் கூட வார்டு கவுன்சிலர்களாக போட்டியிட்டு வெற்றி பெற்றால் தான் சேர்மன் ஆக முடியும்.

உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை 6ம் தேதி தொடங்குகிறது. அரசியல் கட்சினரிடையே பரபரப்பு இல்லாமல் மந்த கதியில் உள்ளது. உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளது. இந்நிலையில், கோர்ட் தீர்ப்புக்கு பின்பு போட்டியிடுவது குறித்து முடிவு செய்யலாம் என பல வேட்பாளர்கள் காத்திருக்கின்றனர்.

இதற்கிடையே அ.தி.மு.க.,வில் ஏற்கனவே போட்டியிட்டு வெற்றி பெற்ற இடங்களில் இம்முறை போட்டியிடுவதற்கும் வேட்பாளர்களை தயார் செய்து வைத்துள்ளனர். கூட்டணி கட்சியினர் வெற்றி பெற்ற இடங்களில் அந்தந்த கூட்டணி கட்களுக்கே கொடுக்கலாம் எனவும் முடிவு செய்துள்ளனர். அதுமட்டுமின்றி கூட்டணி பேச்சு வார்த்தையில் ஏற்படும் முடிவுகள் குறித்து சீட் கொடுப்பது மாறலாம் என கருதுகின்றனர்.

Advertisement


Source link

Tags
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close
%d bloggers like this: