அரசியல்

நீட் மசோதாக்களை மீண்டும் நிறைவேற்ற சட்டமன்ற சிறப்புக் கூட்டம் : ஸ்டாலின்

நீட் விலக்கு மசோதாக்களை மீண்டும் நிறைவேற்ற சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டுமென தமிழக அரசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

நீட் தேர்வு விலக்கு மசோதா நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை கேட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக 11 கடிதங்களை மத்திய அரசுக்கு எழுதியுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இந்நிலையில், நீட் விலக்கு மசோதாக்கள் தொடர்பாக, கடிதம் எழுதுகிறோம் என்ற நாடகத்தை இனியும் தொடராமல் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீட் விலக்கு மசோதாக்களை மீண்டும் நிறைவேற்ற சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டுமென தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.

     

அந்த அறிக்கையில், “எதிர்க்கட்சி தலைவர்களை அழைத்துச் சென்று பிரதமரிடம் நேரில் வலியுறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். விலக்கு கேட்கிறோம் என்ற போர்வையில் கடிதம் எழுதி அதிமுக அரசு திட்டமிட்டு தாமதம் செய்கிறது. நீட் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளின் துரோகச் செயலை தமிழகம் ஒருபோதும் மன்னிக்காது. 

மசோதாவை மீண்டும் நிறைவேற்றுவோம் என்ற முதல்வர் உறுதிமொழியை நீதிமன்றத்தில் தெரிவிக்காதது ஏன்?. நீட் மசோதாக்களை மீண்டும் அவையில் நிறைவேற்றும் மனநிலையில் அதிமுக அரசு இல்லை. நீட் பிரச்னையை மூடி முடித்துவிட வேண்டும் என்ற அதிமுக அரசின் எண்ணத்தை தெளிவாக்குகிறது” என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


Source link

Tags
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close
%d bloggers like this: