வேலை வாய்ப்பு

நிலக்கரி நிறுவனத்தில் வேலை – 88,585 காலி இடங்கள் அறிவிப்பு!

சவுத் சென்ட்ரல் கோல்பீல்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில், MTS சர்வேயர், எலக்ட்ரீசியன், ஃபிட்டர் போன்ற 26 வெவ்வேறு வகையான பணிகளுக்கான காலியிடங்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணிகள்:

1. MTS சர்வேயர்

2. எலக்ட்ரீசியன்

3. டர்னர்

4. ஃபிட்டர் உள்ளிட்ட பல்வேறு பணிகள்

மொத்த காலியிடங்கள் = 88,585

முக்கிய தேதிகள்:

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கிய தேதி: 25.07.2019

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.11.2019

தேர்வுக்கட்டணம்:

1. எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / பெண்கள் / மாற்றுத்திறனாளிகள் / முன்னாள் ராணுவத்தினர் – ரூ.180

2. மற்ற அனைத்து பிரிவினர் மற்றும் ஆண்கள் போன்றோருக்கு தேர்வுக்கட்டணம் – ரூ.350

குறிப்பு: 

கணினி வழித்தேர்வுக்குப் பின்பு, எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / பெண்கள் / மாற்றுத்திறனாளிகள் / முன்னாள் ராணுவத்தினர் போன்றோர் செலுத்திய தேர்வுக்கட்டணத்திலிருந்து ரூ.180-யும், மற்ற அனைத்து பிரிவினர் மற்றும் ஆண்கள் போன்றோர் செலுத்திய தேர்வுக்கட்டணத்திலிருந்து ரூ.250-யும் திரும்ப வழங்கப்படும்.

ஊதியம்:

குறைந்தபட்சமாக ரூ.23,852 முதல் அதிகபட்சமாக 56,800 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

குறிப்பு:

பணிகளுக்கேற்ப ஊதியங்களில் மாற்றங்கள் உண்டு.

வயது வரம்பு: (25.07.2019 அன்றுக்குள்)

1. குறைந்தபட்ச வயது வரம்பு: அனைத்து பிரிவினருக்கும் 18 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும்.

2. அதிகபட்ச வயது வரம்பு: பொது / ஓபிசி பிரிவினராக இருந்தால்  33 வயது நிரம்பாதவராகவும், எஸ்.சி / எஸ்.டி பிரிவினராக இருந்தால் 35 வயது நிரம்பாதவராகவும் இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி:

குறைந்தபட்சமாக 8,10,12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் அதிகபட்சமாக இளங்கலை பட்டப்படிப்பு பயின்று தேர்ச்சி பெற்றவர்கள் வரை இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

குறிப்பு: 

1. பணிகளுக்கேற்ப கல்வித்தகுதியில் மாற்றங்கள் உண்டு.

2. ஐடிஐ , டிப்ளமா முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆன்லைனில், http://www.scclcil.in/– என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.

மேலும், இது குறித்த முழுத் தகவல்களைப் பெற, http://www.scclcil.in/images/notifications/891a80efd4fd9ed6dc179b1cfaa5b6f8.pdf – என்ற இணையதள முகவரிக்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.


Source link

Tags
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close
%d bloggers like this: