இந்தியா

நாங்குநேரியில் காங். பரிதாபம்.. வெற்றிப் பாதையில் அதிமுக.. நாராயணன் தொடர்ந்து முன்னிலை | Nanguneri By Election Results 2019 LIVE: aiadmk candidate reddiarpatti v narayanan leading

Thirunelveli

oi-Velmurugan P

|

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்கள் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

திருநெல்வேலி: நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

நாங்குநேரி தொகுதியில் முன்னதாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வசந்தகுமார் எம்எல்ஏவாக இருந்தார். இவர் கன்னியாகுமரி எம்பியானதால் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து காங்கிரஸ் சார்பில் ரூபி மனோகரன் போட்டியிட்டார்.

 Nanguneri By Election Results 2019 LIVE: aiadmk candidate reddiarpatti v narayanan leading

அவரை எதிர்த்து அதிமுக சார்பில் ரெட்டியார்பட்டி வி நாராயணன் போட்டியிட்டார். கடந்த 21ம் தேதி நாங்குநேரியில் இடைத்தேர்தல் நடந்தது. இன்று வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. இந்த தொகுதியில் அதிமுக தொடக்கம் முதலே முன்னிலை வகித்து வருகிறது.

காலை 9.30மணி நிலவரப்படி நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் 4737 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் 2865 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளார். இதன் மூலம் 1872 வாக்குகள் அதிகம் பெற்று அதிமுக வேட்பாளர் ரெட்டியார் பட்டி நாராயணன் முன்னிலை வகித்தார்.

நாங்குநேரியில் காங்கிரஸ் பின்னடைவு.. எப்படி நடந்தது மாற்றம்.. அதிமுக வெற்றிக்கு உதவிய 6 காரணங்கள்!

10. 20 மணி நிலவரப்படி அதிமுக வேட்பாளர் ரெட்டியார் பட்டி நாராயணன் 5737 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் 2865 வாக்குகளும் பெற்று இருந்தனர். இதன் மூலம் அதிமுக வேட்பாளர் 2872 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.

10:30 மணி நிலவரப்படி அதிமுக வேட்பாளர் ரெட்டியார் பட்டி நாராயணன் 9327 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் 6353 வாக்குகளும் பெற்று இருந்தனர். இதன் மூலம் அதிமுக வேட்பாளர் 2974 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.


திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!
Source link

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close