தமிழகம்

தொடர் கனமழை : சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

தொடர் கனமழை காரணமாக சென்னையில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. மழையின் எதிரொலியாக தூத்துக்குடி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராமநாதபுரம் மற்றும் கடலூரில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே புதுச்சேரியில் பள்ளி மற்றும் கல்லூரி நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது.

சென்னை மழை பாதிப்பு: உதவி எண்கள் அறிவிப்பு

அதேசமயம் சென்னையில் விடுமுறை குறித்து முடிவெடுக்கப்படவில்லை என சென்னை ஆட்சியர் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தொடர் கனமழையின் எதிரொலியாக, தற்போது சென்னையிலும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை பள்ளி மற்றும் கல்லூரி விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

பருவமழை முன்னேற்பாடுகள் – தமிழகத்திற்கு ரெட் அலர்ட்..!


Source link

Tags
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close
%d bloggers like this: