தமிழகம்

தயாரிக்க அழுகிய பழங்கள் ஜூஸ்! நேரில் கண்ட மக்கள் அதிர்ச்சி!| Dinamalar

கோவை:நகரில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய ஆய்வில், சில கடைகளில் பழரசத்துக்காக அழுகிய பழங்கள் பயன்படுத்துவது கண்டறியப்பட்டது. கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளிலும், 100க்கும் மேற்பட்ட ரெடிமேடு பழரச கடைகள் செயல்பட்டு வருகின்றன.
இது தவிர, நகரின் பல்வேறு பகுதிகளிலும், நடமாடும் பழரசக்கடைகள் உள்ளன.இக்கடைகளில் சிலவற்றில் ஜூஸ் தயாரிக்க, தரம் குறைந்த பழங்கள் பயன்படுத்தப்படுவதாக உணவு பாதுகாப்பு துறைக்கு, தொடர்ந்து புகார் தெரிவிக்கப்பட்டு வந்தது.இதையடுத்து துறை சார்பில், கடந்த வாரம் கோவை காந்திபுரம், பஸ் ஸ்டாண்டில் திடீர் ஆய்வு நடத்தினர். ஆய்வில், பல கடைகளில் பழரசம் தயாரிக்க அழுகிய பழங்களை பயன்படுத்தியது தெரிந்தது.இதையடுத்து, 35 கிலோ அளவிலான அழுகிய பழங்களை, அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். பழரச தயாரிப்புக்கு அழுகிய பழங்கள் பயன்படுத்துவதை, நேரில் கண்ட மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். பெரிய பழக்கடைகளில் மீதமாகும் அழுகிய பழங்களை, குறைந்த விலைக்கு வாங்கி வந்து, ஜூஸ் தயாரித்து விற்று வந்தது தெரியவந்தது.கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகத்துறை உணவுப்பிரிவு நியமன அலுவலர் தமிழ்செல்வன் கூறுகையில், ”அழுகிய பழங்கள் பயன்படுத்தப்படுவது குறித்து, தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. தொடர்ந்து வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
”ஜூஸ் மட்டுமல்ல, பொதுவாகவே பொதுமக்கள் உணவுப் பொருட்களை வாங்கும் போது அவற்றின் தயாரிப்பு, காலாவதி தேதியை கட்டாயம் பார்க்க வேண்டும். உணவு பொருட்களின் தரம் குறித்து பல முறை உறுதி செய்வது நல்லது,” என்றார்.ஜூஸ் மட்டுமல்ல, பொதுவாகவே, பொதுமக்கள் உணவுப் பொருட்களை வாங்கும் போது அவற்றின் தயாரிப்பு, காலாவதி தேதியை கட்டாயம் பார்க்க வேண்டும். உணவு பொருட்களின் தரம் குறித்து பல முறை உறுதி செய்வது நல்லது.- தமிழ்செல்வன் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்

Advertisement


Source link

Tags
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close
%d bloggers like this: