வணிகம்

தங்க சேமிப்பு பத்திரம் கிராமுக்கு ரூ.3,788 என நிர்ணயம்

பதிவு செய்த நாள்

05
அக்
2019
23:48

புது­டில்லி:மத்­திய அரசு, நாளை வெளி­யி­டும் தங்க சேமிப்பு பத்­தி­ரத்­திற்கு, ஒரு கிராம், 3,788 ரூபாய் என, விலை நிர்­ண­யம் செய்­துள்­ளது.

மக்­களின் பண்­டிகை கால கொண்­டாட்ட மன­நி­லையை பயன்­ப­டுத்­திக் கொள்­ளும் வகை­யில், திங்­க­ளன்று அடுத்த தங்க சேமிப்பு பத்­தி­ரத்தை வெளி­யிட தீர்­மா­னித்­துள்­ளது.இந்த தங்க சேமிப்பு பத்­தி­ரம், நாளை முதல், 11ம் தேதி வரை, ஒரு கிரா­முக்கு, 3,788 ரூபாய் என்ற
விலை­யில் வெளி­யி­டப்­பட உள்­ளது.

வலை­த­ளம் அல்­லது மின்­னணு முறை­யில் மேற்­கொள்­ளும் முத­லீ­டு­க­ளுக்கு, ஒரு
கிரா­முக்கு, 50 ரூபாய் தள்­ளு­படி வழங்­கப்­படும் என, மத்­திய நிதி­ய­மைச்­ச­கம் அறி­வித்­து
உள்­ளது. இத­னால், ‘கிரெ­டிட், டெபிட்’ கார்டு உள்­ளிட்ட மின்­னணு பணப் பரி­வர்த்­த­னை­யில், தங்க சேமிப்பு பத்­தி­ரங்­களை வாங்­கு­வோ­ருக்கு, ஒரு கிராம், 3,738 ரூபாய்க்கு கிடைக்­கும்.

மத்­திய அரசு, தங்­கம் இறக்­கு­ம­தியை குறைக்­கும் நட­வ­டிக்­கை­யில் ஒன்­றாக, 2015, நவம்­ப­ரில், தங்க சேமிப்புபத்­திர திட்­டத்தை அறி­வித்­தது. இதில்,தங்­கத்தை, ஆவண வடி­வில்
சேமிக்­க­லாம். ஒரு கிராம் தங்­கம், ஒரு யூனிட் என்ற கணக்­கில் வழங்­கப்­படும். ஒரு­வர்,
ஏப்., – மார்ச் வரை­யி­லான ஒரு நிதி­யாண்­டில், குறைந்­த­பட்­சம், 1 கிராம் முதல், அதி­க­பட்­சம், 500 கிராம் வரை, தங்க சேமிப்பு பத்­தி­ரத்­தில் முத­லீடு செய்­ய­லாம்.

Source link

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close
%d bloggers like this: