ஆன்மிகம்

தங்க சூரியபிரபை வாகனத்தில் சந்திரசேகரர் வீதி உலா


கார்த்திகை தீபத்திரு விழாவின் 2-வது நாளில் தங்க சூரியபிரபை வாகனத்தில் சந்திரசேகரர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவின் 2-வது நாளான நேற்று காலை 11 மணி அளவில் விநாயகர் மூஷிக வாகனத்திலும், அம்பாளுடன் சந்திரசேகரர் தங்க சூரியபிரபை வாகனத்திலும் அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் எதிரே உள்ள 16 கால் மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது.

பின்னர் மேள தாளங்கள் முழங்க மூஷிக வாகனத்தில் விநாயகரும், அதன்பின்னே தங்க சூரியபிரபை வாகனத்தில் சந்திரசேகரரும் கோவில் மாடவீதியை சுற்றி வந்தனர். மாட வீதிகளில் பக்தர்கள் தங்களின் வீடுகளின் அருகே சாமி வந்ததும் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.

மேலும் பக்தர்கள் சிலர் கரும்பில் தொட்டில் அமைத்து தங்கள் குழந்தையை அதில் அமர வைத்து நேர்த்தி கடனாக மாட வீதியில் சுற்றி வலம் வந்தனர். இதையடுத்து அவர்கள் தொட்டில் அமைக்க பயன்படுத்திய கரும்புகளை உடைத்து அங்கிருந்தவர்களுக்கு வழங்கினர். இதேபோல் 7-ம் நாள் விழாவான தேரோட்டத்தின் போது ஏராளமான பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்துவார்கள்.

தொடர்ந்து இரவு 10 மணி அளவில் நடைபெற்ற உற்சவத்தில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், அருணாசலேஸ்வரர் உண்ணாமலை அம்மன், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் தனித்தனி வெள்ளி இந்திர விமானங்களில் கோவில் மாடவீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

மகாதீபத்திற்கு பக்தர்கள் நெய் காணிக்கை வழங்குவதற்காக ஒரு கவுண்ட்டர் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் ஒரு கிலோ நெய் ரூ.250-க்கும், அரை கிலோ ரூ.150-க்கும், கால் கிலோ ரூ.80-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.. இதில் ஏராளமான பக்தர்கள் ஆர்வத்துடன் நெய் காணிக்கைக்காக பணம் செலுத்தி ரசீது பெற்று செல்கின்றனர். 
Source link

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close
%d bloggers like this: