ஜோதிடம்

டிசம்பர் மாதம் 12 ராசிகளுக்கும் சந்திராஷ்டம நாட்கள் – கவனம் தேவை | Chandrashtama Effects of Chandrashtama period for the month of December

News

oi-C Jeyalakshmi

|

சென்னை: சந்திராஷ்டம நாட்கள் என்றாலே சங்கடம் தரும் நாட்கள் என்று பலருக்கும் பயம்தான். கவலை வேண்டாம் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் டிசம்பர் மாதத்தில் சந்திராஷ்டம நாட்கள் எப்போது என்று எழுதியிருக்கிறோம். உங்க டைரியில இந்த நாட்களை குறித்து வைத்துக்கொள்ளலாம். அதற்கேற்ப முன்னேற்பாடுகளை செய்து வைத்துக்கொள்ளுங்கள்.

Chandrashtama Effects of Chandrashtama period for the month of December

மேஷம் : டிசம்பர் 23 காலை 11.52 முதல் டிசம்பர் 25 மாலை 4.41 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமாக இருக்கவும். வம்பு சண்டைக்கு போக வேண்டாம். மவுன விரதம் மனதிற்கும் உடம்பிற்கும் ரொம்ப நல்லது.

ரிஷபம் : டிசம்பர் 25 மாலை 4.41 மணி முதல் டிசம்பர் 27 இரவு 11.45 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை. இரண்டு நாட்களுக்கு மவுன விரதம் இருக்கவும்.

மிதுனம் : டிசம்பர் 1 முதல் 3ஆம் தேதி காலை 12.56 வரையிலும் டிசம்பர் 27 இரவு 11.45 மணி முதல் டிசம்பர் 30 காலை 9.34 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமாக இருக்கவும். இந்த 4 நாட்கள் வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனமாக இருக்கவும்.

கடகம் : டிசம்பர் 3 ஆம் தேதி காலை 12.56 மணி முதல் டிசம்பர் 5,2019 இரவு 1.23 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளது. இரண்டு நாட்கள் கவனம் தேவை. நிதானமாக இந்த நாட்களை கடக்கவும்.

சிம்மம் : டிசம்பர் 5,2019 இரவு 1.23 மணி முதல் டிசம்பர் 8 அதிகாலை 1.27 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை. மவுன விரதம் மனதிற்கு நல்லது.

கன்னி: டிசம்பர் 8 அதிகாலை 1.27 மணி முதல் டிசம்பர் 10 காலை 11.17 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனமாக இருக்கவும்.

துலாம்: டிசம்பர் 10 காலை 11.17 மணி முதல் டிசம்பர் 12 இரவு 6.23 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. மவுன விரதம் இருக்கவும்.

விருச்சிகம் : டிசம்பர் 12 இரவு 6.23 மணி முதல் டிசம்பர் 14 இரவு 11.16 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளது. வம்பு வழக்குகளில் தலையிட வேண்டாம். வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம் மவுன விரதம் இருக்கவும்.

தனுசு : டிசம்பர் 14 இரவு 11.16 மணி முதல் டிசம்பர் 17, காலை 2.47 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளது. இரண்டு நாட்களுக்கு மவுன விரதம் இருக்கவும் கவனம் தேவை.

மகரம் : டிசம்பர் 17 காலை 2.47 மணி முதல் டிசம்பர் 19,காலை 5.39 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளது கவனம் தேவை மவுன விரதம் இருக்கவும். இரண்டு நாட்களுக்கு கவனம் தேவை.

கும்பம் : டிசம்பர் 19,காலை 5.39 மணி முதல் டிசம்பர் 21,காலை 8.28 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளது கவனம் தேவை. மவுன விரதம் இருப்பது மனதிற்கு ஆறுதல் தரும்.

மீனம் : டிசம்பர் 21 காலை 8.28 மணி முதல் டிசம்பர் 23,காலை 11.52 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளது. மவுன விரதம் இருக்கவும். வண்டி வாகனங்களில் செல்லும் போது நிதானம் தேவை.


திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!
Source link

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close