விளையாட்டு

சீன ஓபன் பேட்மின்டன் – அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய ஆடவர் இரட்டையர் ஜோடி! | | Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World

பெய்ஜிங்: சீன ஓபன் பாட்மின்டன் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி.

இந்திய ஜோடி சர்வதேச தரவரிசையில் 9வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இணை, சீனாவின் முன்னணி இணையான லி ஜன் மற்றும் லியு சென்னை சந்தித்தது. முதல் செட்டை இந்திய ஜோடி 21-19 எனக் கைப்பற்றியது.

இந்நிலையில், ஆட்டத்தை மூன்றாவது செட்டிற்கு கொண்டுசெல்ல விரும்பாத இந்திய அணி, இரண்டாவது செட்டையும் 21-15 என்ற கணக்கில் கைப்பற்றி, அரையிறுதிப் போட்டியில் நுழைந்தது.

இந்தப் போட்டியானது மொத்தம் 43 நிமிடங்கள் நீடித்தது. அரையிறுதிப் போட்டியில், உலகின் நம்பர் ஒன் ஆண்கள் இரட்டையர் இணையான இந்தோனேஷியாவின் மார்கஸ் – கெவின் இணையை எதிர்கொள்கிறது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்
Source link

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close
%d bloggers like this: