விளையாட்டு

சீன ஓபன் பேட்மிண்டன் – அரையிறுதியில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி தோல்வி || BWF China Open


சீன ஓபன் பேட்மிண்டன் போட்டியில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஜோடி அரையிறுதியில் தோல்வி அடைந்தது.

சீன ஓபன் பேட்மிண்டன் - அரையிறுதியில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி தோல்வி

சாத்விக் -சிராக் ஜோடி

புஜோவ்:

சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி புஜோவ் நகரில் நடந்து வருகிறது. இதில், இன்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி, இந்தோனேசியாவின் நம்பர் ஒன் ஜோடியான மார்கஸ் பெர்னால்டி ஜிடோன்-கெவின் சஞ்சயா சுகாமுல்ஜோவுடன் மோதினர்.

இதில் சிறப்பாக ஆடிய இந்தோனேசிய ஜோடி 21-16, 22-20 என்ற நேர் செட் கணக்கில் இந்திய ஜோடியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் இந்தோனேசியா ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
Source link

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close
%d bloggers like this: