விளையாட்டு

சவுராஷ்டிரா அணியின் கேப்டனாக உனத்கட் நியமனம் || Jaydev Unadkat to lead Saurashtra for Vijay Hazare tournament


விஜய் ஹசாரே டிராபிக்கான சவுராஷ்டிரா அணியின் கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் உனத்கட் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் நடைபெறும் மிகப்பெரிய உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரான விஜய் ஹசாரே டிராபி வருகிற 24-ந்தேதி தொடங்குகிறது. ரஞ்சி டிராபியில் விளையாடும் அனைத்து அணிகளும் இந்தத் தொடரில் பங்கேற்கும். சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் வீரர்களை தேர்வு செய்வதற்காக இன்று கூடியது. அப்போது தேர்வுக்குழு சவுராஷ்டிரா அணியின் கேப்டனாக உனத்கட்டை கேப்டனாக நியமித்தது.

ரவீந்திர ஜடேஜா மற்றும் புஜாரா ஆகியோர் தென்ஆப்பிரிக்கா தொடரில் விளையாட இருப்பதால் அவர்கள் பெயர் சேர்க்கப்படவில்லை. அந்தத் தொடர் முடிந்த பின்னர் அவர்கள் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது.

இந்திய அணியில் இடம் கிடைக்காதது குறித்து விமர்சனம் செய்த ஷெல்டன் ஜாக்சனுக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது.

சவுராஷ்டிரா அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:

1. உனத்கட் (கேப்டன்), 2. ஷெல்டன் ஜாக்சன் (விக்கெட் கீப்பர்), 3. கம்லேஷ் மேக்வானா, 4. தர்மேந்திரசிங் ஜடேஜா, 5. ஹார்விக் தேசாய் (விக்கெட் கீப்பர்), 6. அர்பித் வசவாடா, 7. சிராக் ஜானி, 8. பிரேராக் மன்கட், 9. ராஜ்தீப் தர்பார், 10. விஷ்வராஜ் ஜடேஜா, 11. கஷங்க் பட்டேல், 12. ஹர்திக் ரதோட், 13. ஜெய் சவுகான், 14. ஹிமாலே பராட், 15. அக்னிவேஷ் அயாச்சி.
Source link

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close
%d bloggers like this: