தமிழகம்

கோவை பூங்காவில் மாணவி பலாத்காரம் முக்கிய குற்றவாளியை பிடிக்க தனிப்படை தீவிரம் | Separate intensity to catch the main culprit of rape student in Coimbatore park

கோவை: கோவை  சீரநாயக்கன்பாளையம் பகுதியில் பிளஸ் 1 படிக்கும் 16 வயது மாணவி,  கடந்த  26ம் தேதி இரவு 8 மணிக்கு பூங்காவில் காதலருடன் பேசி கொண்டிருந்தார். திடீரென  6 வாலிபர்கள் அங்கே வந்தனர். காதலனிடம் இனி இங்கே வரக்கூடாது, மாணவியிடம்  பேசக்கூடாது என மிரட்டினர். அவர், எதிர்த்து கேள்வி கேட்கவே அவரை  தாக்கினர். இதில் அவர் மயங்கி விழுந்தார். பின்னர், மாணவியை மிரட்டி, இருட்டான பகுதிக்கு தூக்கி சென்றனர்.  இவர்களில் மணிகண்டன் என்பவர் பலாத்காரம் செய்தபோது ஒருவர் போட்டோ மற்றும் வீடியோ எடுத்துள்ளார். பலாத்கார போட்டோவை  மாணவியிடம் காட்டிய கும்பல், எங்கள் மீது எதாவது புகார் தந்தால் இதை வாட்ஸ்அப், பேஸ்புக்கில் பரப்பி விடுவோம், நீ எங்கேயும் நடமாட முடியாமல் செய்து  விடுவோம் என மிரட்டிவிட்டு தப்பினர்.

இதுதொடர்பாக  மாணவியின் தாய், கோவை மேற்கு பகுதி அனைத்து மகளிர் போலீசில் புகார்  அளித்தார். இதையடுத்து, சீரநாயக்கன்பாளையத்தை  சேர்ந்த ராகுல் (21), பிரகாஷ் (22), கார்த்திகேயன் (28), நாராயணமூர்த்தி  (30) ஆகியோரை போக்சோ பிரிவில் போலீசார் கைது செய்தனர். தப்பிய மணிகண்டன் (32),  பப்ஸ் கார்த்திக் (28) ஆகியோரை தேடி வருகின்றனர். இவர்களை பிடிக்க 4  தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார், இவர்களை  தேடுகின்றனர்.
கைதான கும்பலை சேர்ந்தவர்கள் போலீசாரிடம் கூறுகையில், ‘‘எங்கள் கூட்டத்தில் இருந்த மணிகண்டன்,  திடீரென மாணவியிடம் அத்துமீறினான். இதை தடுக்க வந்த மாணவியின் காதலனை தாக்கினோம். மாணவியை போட்டோ, வீடியோ எடுத்தால் வேறு யாரிடமும்  புகார் தர மாட்டார் என நினைத்தோம். ஆனால் போலீசில் எங்களை பற்றி கூறியதால்  மாட்டி கொண்டோம்’’ என்றனர். கைதான 4 பேரின் செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதில் மாணவி தொடர்பான படங்களை வேறு யாருக்காவது அனுப்பியிருக்கிறார்களா என விசாரணை  நடக்கிறது.


Source link

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close
%d bloggers like this: