ஜோதிடம்

குரு பெயர்ச்சி 2019-20: மகம்,பூரம்,உத்திரம் நட்சத்திரங்களுக்கு பலன்கள், பரிகாரங்கள் | Guru Peyarchi 2019-20 Prediction and remedies for Magam, Pooram and Uthiram Nakshatra

News

lekhaka-C jeyalakshmi

|

சென்னை: குரு பகவான் பொன்னவன். குரு பார்வை பட்ட இடங்கள் சுபிட்சம் அடையும். குரு பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசியில் பிரவேசம் செய்யப் போகிறார். மனிதர்கள் பிறந்த நாள் அன்று சந்திரன் சஞ்சரிக்கும் ராசி நட்சத்திரம் குறிப்பிடுகிறோம். அசுவினி முதல் ரேவதி வரை 27 நட்சத்திரங்கள் உள்ளன. இதில் மகம், பூரம், உத்திரம் நட்சத்திரம் ஒன்றாம் பாதம் சிம்ம ராசியில் உள்ளன. இந்த மூன்று நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு குரு பெயர்ச்சி எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

குருபகவான் இப்போது விருச்சிக ராசியில் கேட்டை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். வாக்கிய பஞ்சாங்கப்படி செவ்வாய்கிழமை அதிகாலை முதல் விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரத்திலிருந்து தனுசு ராசியின் மூலம் நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி ஆக உள்ளார். மூலம் நட்சத்திரத்தில், அக்டோபர் 29 முதல் டிசம்பர் 20ம் தேதி வரையிலும் சஞ்சரிப்பார். பூராடம் நட்சத்திரத்தில், 2020 மார்ச் மாதம் 27ம் தேதி வரையிலும் சஞ்சரிப்பார்.

அதிசாரமாக குருபகவான் 2020 மார்ச் 27 முதல் மகரம் ராசி உத்திராடம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கப்போகிறார். மீண்டும் குருபகவான்

மே 13ஆம் தேதி முதல் செப்டம்பர் 8ஆம் தேதி வரை குரு வக்கிரமாக இருப்பார். மீண்டும் தனுசு ராசிக்க வரும் குரு பகவான் டிசம்பர் 26ஆம் தேதி மகரம் ராசிக்கு நேரடியாக பெயர்ச்சி அடைகிறார். இந்த சஞ்சாரங்களினால் நன்மைகளும் சில பாதிப்புகளும் ஏற்படுவது இயல்புதான். இனி இந்த குரு சஞ்சாரத்தினால் மகம், பூரம், உத்திரம் நட்சத்திரகாரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கிறது என்று பார்க்கலாம்.

சுக்கிரன் பெயர்ச்சி 2019: விருச்சிக ராசிக்கு இடம் பெயரும் சுக்கிரன் – 12 ராசிக்கும் பலன்கள்

பணவருமானம்

பணவருமானம்

குரு பகவான் மகம் நட்சத்திரத்திற்கு ஒன்பதாவது நட்சத்திரத்திலிருந்து பத்தாவது நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்திற்கு மாறுகிறார். இந்த இரண்டு நட்சத்திரங்களுமே கேதுவின் அம்சமாக கொண்டவை. மகம் நட்சத்திரகாரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி அற்புதமான பலன்களை அள்ளித்தரப்போகிறது.

மகத்தை பிறந்தவர்கள் ஜெகத்தை ஆள்வார்கள் என்று சொல்வார்கள். பணவரவு அற்புதமாக இருக்கும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும்.

கணவன் மனைவி உறவு

கணவன் மனைவி உறவு

தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைகள் உங்கள் சொல்லை கேட்பார்கள். எதிர்பாரத திடீர் திருப்பம் ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்னைகள் நீங்கும். வேலை செய்யும் இடத்தில் பொறுப்புகள் கூடும். எச்சரிக்கையாக பேசுவது நல்லது. மாணவர்களுக்கு முன்பு படித்தது இப்போது கை கொடுக்கும்.

காரிய வெற்றி

காரிய வெற்றி

குரு பகவான் உங்கள் நட்சத்திரத்திற்கு எட்டாவது நட்சத்திரத்திலிருந்து ஒன்பதாவது நட்சத்திரத்திற்கு மாறுகிறார். பூரம் நட்சத்திரகாரர்களுக்கு திட்டமிட்ட காரியங்கள் வெற்றி கிடைக்கும். தடைபட்டு பாதியில் நின்ற காரியங்கள் முடியும். அடுத்தவரை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம் காரிய வெற்றிக்கு திட்டமிட்டு செயல்படுங்கள். இல்லாவிட்டால் உங்க விருப்பத்திற்கு மாறாக சில காரியங்கள் நடக்கலாம். உங்களின் ஆழ் மனதில் உள்ள ஆசைகள், எண்ணங்கள் நிறைவேறும். புதிய தொழில், ஆசையை நிறைவேற்றுவார் குரு. நம்பிக்கை அதிகரிக்கும் முன் ஜென்ம புண்ணியங்கள் நிறைவேறும்.

ராஜாங்க பதவி தேடி வரும்

ராஜாங்க பதவி தேடி வரும்

திருமணம் நடைபெறும் சனியோடு குரு இணையும் காலம் ராஜயோகம். பயணங்களில் வெற்றி, நல்ல வருமானம், நல்ல வேலை கிடைக்கும். உங்கள் ராசியை குரு பார்ப்பது ராஜயோகத்தை தரும். ராஜங்க பதவி தேடி வரும். பெயர் புகழ் கீர்த்தி தரும் குரு லாப ஸ்தானத்தை பார்க்கும் போது தொழிலில் வெற்றி லாபத்தை தருவார். ஆளுமை தன்மையுள்ள விசேசத்தை தருவார். ஆற்றல் வாய்ந்த நேரம். பாக்ய ஸ்தானத்தை பார்க்கும் காலத்தில் எதிர்பாராத பாக்கியங்கள் தேடி வரும்.உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சில நேரங்களில் வேலைப்பளு வீண் அலைச்சல் இருக்கும். குழந்தைகளிடம் அன்பாக பேசுங்கள் நல்லது நடக்கும்.

பெண்கள் பாதியில் நின்ற காரியங்களை விரைவாக செய்து முடிப்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு சொல்வாக்கும் செல்வாக்கும் உயரும். மாணவர்கள் கல்வியில் வெற்றிபெற படிப்பில் அக்கறையும் கவனமும் செலுத்த வேண்டும். வெள்ளிக்கிழமை ஆஞ்சநேயரை வெண்ணெய் சாற்றி வழிபட நன்மைகள் நடக்கும்.

உதவி கிடைக்கும்

உதவி கிடைக்கும்

குரு பகவான் உங்கள் நட்சத்திரத்திற்கு ஏழாவது நட்சத்திரத்திலிருந்து எட்டாவது நட்சத்திரத்திற்கு மாறுகிறார். பாதியிலே நின்று போன வீட்டு வேலைகள் பூர்த்தியாகி சுபகாரியம் நடக்கும்.பிள்ளைகளால் பெருமை. பிள்ளைகள் விருப்பப்படி படிப்பும் அமையும்.வசதி வாய்ப்பு பெருகி நிம்மதியான சூழ்நிலை கூடும்.எதிர்பார்த்த பதவி உயர்வு இடமாற்றம்.புது வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு வாய்ப்புகள் கை கூடிவரும். நீங்க செய்த நற்செயல்களுக்கெல்லாம் பலன் இப்பொழுது தான் கிடைக்க போகிறது.

அலுவலகத்தில் நன்மை

அலுவலகத்தில் நன்மை

புத்திசாதூரியத்தால் எந்த தடைகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். எந்த ஒரு பிரச்னையையும் துணிச்சலுடன் எதிர்கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கண்மூடித்தனமாக எதையும் செய்யாமல் விழிப்புடன் இருப்பது லாபம் அதிகரிக்கச் செய்யும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேன்மை அடைவார்கள்.

நன்மை நடக்கும்

நன்மை நடக்கும்

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். குடும்பத்தினருடன் விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே இதமான உறவு காணப்படும். பிள்ளைகள் மூலம் நன்மை உண்டாகும் அவர்களது செயல்களால் பெருமை கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் மேன்மை உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விழிப்புடன் செயல்படுவது நல்லது. வியாழக்கிழமை ராகவேந்திரரை வழிபட நன்மைகள் நடக்கும்.


திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!
Source link

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close