செய்திகள்

கல்லூரி மாணவியின் நிர்வாண வீடியோவை பேஸ்புக்கில் வெளியிட்ட காதலன்


கருத்து வேறுபாட்டால் பிரிந்து சென்ற கல்லூரி மாணவியின் நிர்வாண வீடியோக்களை காதலனே பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை:

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலை சேர்ந்தவர் பரமேஸ்வரன். இவரது மகன் அஜித்குமார் (வயது 19). இவர் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.  அப்போது இவரது ஊரை 20 வயது மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த மாணவி  சூலூரில் தங்கி இருந்து அங்குள்ள தனியார் கல்லூரியில் 2-ம்ஆண்டு படித்து வருகிறார்.

அஜித்குமாரும், கல்லூரி மாணவியும் நட்பாக பழகி வந்தனர். பின்னர் அந்த நட்பு காதலாக மாறியது. இருவரும் தினமும் வாட்ஸ்- அப் மூலம் வீடியோ காலில் பேசி வந்தனர். தொடர்ந்து அவர்களிடையே நெருக்கம் அதிகரித்ததால் 2 பேரும் நிர்வாண நிலையில் செல்போன் மற்றும் லேப்டாப் வீடியோ காலில் பேசி உள்ளனர். மேலும் குளியல் அறை வீடியோவையும் மாணவி அஜித்குமாருக்கு அனுப்பி உள்ளார்.

பின்னர் 2 பேருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த அஜித்குமார் மாணவி நிர்வாண நிலையில் இருக்கும் வீடியோக்களை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவி நடந்த சம்பவத்தை தனது பெற்றோரிடம் கூறினார். அவர்கள் இது குறித்து சூலூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித்குமாரை கைது செய்தனர்.

அவரிடம் இருந்த மாணவியின் நிர்வாண வீடியோக்களை பறிமுதல் செய்தனர். அஜித்குமாரிடம் நடத்திய விசாரணையில் அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

நான் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறேன். கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு எனது சொந்த ஊரில் பள்ளியில் ஒன்றாக படித்த மாணவியை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. நீண்ட வருடங்களுக்கு பிறகு சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டதால் நாங்கள் 2 பேரும் நட்பாக பழகி வந்தோம். தற்போது அந்த மாணவி சேவூரில் குடும்பத்துடன் தங்கி இருந்து சூலூரில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

நாளடைவில் எங்களது நட்பு காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி வாட்ஸ்-அப் வீடியோ காலில் பேசி வந்தோம். அப்போது நாம் தான் திருமணம் செய்போகிறோமே என ஆசைவார்த்தை கூறி நிர்வாண நிலையில் 2 பேரும் பேசி வந்தோம். அப்போது மாணவி நிர்வாண நிலையில் இருந்த வீடியோக்களை தனியாக சேமித்து என்னுடைய செல்போன் மற்றும் லேப்-டாப்பில் சேமித்து வைத்து இருந்தேன். தனிமையில் நான் இருக்கும் போது மாணவியின் நிர்வாண வீடியோக்களை பார்த்து ரசிப்பேன்.

நாளடையில் அவளிடம் ஆடை இல்லாமலும், குளிக்கும் வீடியோக்களை எடுத்து அனுப்பும்படி கூறினேன். முதலில் மறுத்த அவள் அந்த வீடியோவையும் எனக்கு எடுத்து அனுப்பினாள். அதனையும் நான் சேமித்து வைத்துக்கொண்டேன். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு எங்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் அவள் என்னிடம் பேசுவதையும் பழகுவதையும் தவிர்த்து வந்தாள்.

இதனால் ஆத்திரம் அடைந்த நான் அவளை பழிவாங்கும் எண்ணத்தில் நான் சேமித்து வைத்து இருந்த நிர்வாண வீடியோக்கள் சிலவற்றை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்தேன். மேலும் அவளுடைய உறவினர்களுக்கு வாட்ஸ்-அப் மூலமாக நிர்வான வீடியோக்களை அனுப்பினேன். வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்த அவள் எதற்காக வீடியோக்களை வெளியிட்டாய் என்று கேட்டு கதறி அழுதுள்ளார்.  

அதற்கு நான் இது குறித்து போலீசில்புகார் செய்தால் முகத்தில் ஆசிட் வீசி கொன்று விடுவேன் என்று மிரட்டினேன். தற்போது அவளது பெற்றோர் போலீசில் புகார் செய்ததால் நான் சிக்கி கொண்டேன். இவ்வாறு அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறினார். போலீசார் அஜித்குமார் தனது செல்போன் மற்றும் வீட்டில் இருந்த லேப்-டாப்பில் சேமித்து வைத்து இருந்த மாணவியின் நிர்வாண வீடியோக்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.
Source link

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close
%d bloggers like this: