முக்கியச் செய்திகள்

கடன்தொல்லையால் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தற்கொலை!

news18
Updated: August 16, 2019, 10:05 AM IST

கடன்தொல்லையால் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தற்கொலை!

வி.பி.சந்திரசேகர்

news18

Updated: August 16, 2019, 10:05 AM IST

தமிழகத்தைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வி.பி.சந்திரசேகர் கடன்தொல்லையில் தற்கொலை செய்துகொண்டார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வி.பி.சந்திரசேகர். 1986-ம் ஆண்டு தமிழ்நாடு ரஞ்சி டிராபியில் அறிமுகமானதன் மூலம் அவருக்கான அடையாளத்தை உருவாக்கிக்கொண்டார்.பின்னர், 1988-ம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரானப் போட்டியில் இந்திய அணியில் இடம்பெற்றார். ஏழு ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 88 ரன்கள் எடுத்துள்ளார். தமிழ்நாடு பிரிமியர் லீக் தொடரில் காஞ்சி வீரன் அணியை வாங்கிநிர்வகித்துவந்தார்.

இந்தநிலையில், கடன் தொல்லை காரணமாக நேற்றிரவு மயிலாப்பூரிலுள்ள அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவரது உடல் தற்போது உடற்கூராய்வுக்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Also see:First published: August 16, 2019
Source link

Tags
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close
%d bloggers like this: