இந்தியா

`ஓனரே வந்தாலும் காரைக் கண்டுபிடிக்க முடியாது!’ – மெக்கானிக் கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்

தற்போது சென்னை நகர் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. `அதிலிருந்து பாலமுருகனும் சிராஜுதீனும் எப்படித் தப்பினார்கள்?’ என்ற கேள்வி போலீஸாருக்கு எழுந்துள்ளது. அதுதொடர்பாக அவர்களிடம் விசாரித்தபோது, ` காரைத் திருடுவதற்கு முன் நாங்கள் அந்தப் பகுதியில் சிசிடிவி கேமரா உள்ளதா என்பதைத்தான் முதலில் பார்ப்போம். பிறகுதான் காரைத் திருடுவோம்’ என்று கூறியுள்ளனர். கார் திருட்டு வழக்கில் முதல் தடவையாகக் கைது செய்யப்பட்ட பாலமுருகன், சிராஜுதீனை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

சிராஜுதீன்

சிராஜுதீன்

சுதர்சனன் புகார் கொடுத்து 3 மணி நேரத்தில் அவரின் காரை போலீஸார் கண்டுபிடித்துக் கொடுத்துள்ளனர்.

சென்னையில் கார் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. ஆனால், வீடுகளில் காரை நிறுத்துவதற்குப் போதிய இடவசதி இல்லை. இதனால்தான் கார்களை பலர், வீட்டுக்கு வெளியில் உள்ள சாலை, தெருக்களில் நிறுத்தி வைக்கின்றனர். இதுதான் கார் திருடர்களுக்கு வசதியாக அமைந்துவிடுகிறது. சாலை, தெருக்களில் நிறுத்தப்படும் கார், பைக்குகளைத் திருடுவதற்கென்று சென்னையில் திருட்டுக் கும்பல் செயல்படுவதாக போலீஸார் தெரிவித்தனர்.


Source link

Tags
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close
%d bloggers like this: