tamil top stories

`ஒவ்வோர் ஆண்டும் அண்ணன் வருவான்; இந்த ஆண்டு வரவில்லை!’ – துப்பாக்கிக்கு ராக்கி கட்டிய பெண் போலீஸ்

கவிதாவின் அண்ணன் ராகேஷ். காவலரான இவர், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த தேர்தல் பணிக்காக நக்சல்கள் அதிகம் உள்ள பகுதியான நில்வாயாவுக்குச் சென்றுள்ளார். அந்தப் பகுதி மக்கள் 20 ஆண்டுகளாக ஓட்டுப்போடவில்லை என்பதால் அதுகுறித்து செய்தி சேகரிக்க தூர்தர்ஷன் செய்தியாளர், கேமராமேன், லைட்டிங் உதவியாளர் மற்றும் காவல்துறையினரோடு ராகேஷும் சென்றார். அப்போது நக்சல்கள் நடத்திய தாக்குதலில் ராகேஷ், தூர்தர்ஷன் கேமராமேன் உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்தனர்.

துப்பாக்கி

துப்பாக்கி

ராகேஷின் பணி அவர் சகோதரியான கவிதாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. ரக்‌ஷா பந்தன் வடஇந்தியாவில் சகோதர உறவுகளைப் பெருமைப்படுத்தும் விதமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பெண்கள் தங்களது உறவு முறையில் உள்ள அண்ணன்களுக்கு ரக்‌ஷா கயிறைக் கட்டுவர். கயிறு கட்டிய அந்தப் பெண்ணை சகோதரியாக ஏற்றுக்கொண்டு அந்தப் பெண்ணின் பாதுகா‌ப்‌புக்கு‌ம் நலத்துக்கும் என்றென்றும் காவலாக இருப்பேன் என்று உறுதிகூறுவதே இந்த விழாவின் நோக்கம்.


Source link

Tags
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close
%d bloggers like this: