வணிகம்

எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்த தொழில்துறை உற்பத்தி!

எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்த தொழில்துறை உற்பத்தி!

மாதிரிப்படம்

Karthick S

Karthick S

| news18

Updated: November 12, 2019, 10:41 PM IST

இந்தியாவின் தொழில்துறை உற்பத்தி கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு செப்டம்பர் மாதத்தில் சரிந்துள்ளது.

 

2011-ம் ஆண்டிற்கு பிறகு, அதாவது 8 ஆண்டுகளுக்கு பின்னர் நாட்டின் தொழில்துறை உற்பத்தி செப்டம்பா் மாதத்தில் மிக மோசமான சரிவை சந்தித்துள்ளது. கடந்த 2018-செப்டம்பரில் 4.6 சதவீதமாக இருந்த தொழில்துறை உற்பத்தி, 2019 செப்டம்பரில் மைனஸ் 4.3 சதவீதமாக சரிந்தது. மக்கள் பொருட்கள் வாங்குவதைக் குறைத்து கொண்டுள்ளதும், அதற்கு தகுந்தாற்போல் உற்பத்தி குறைந்துள்ளதும் பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவே இந்த சரிவுக்கும் முக்கிய காரணமாக கருதப்படுகிறது.தொழில்துறை உற்பத்தி வளர்ச்சியைக் கணக்கிடுவதில், கச்சா எண்ணெய், சுரங்கம், உரம், சிமெண்ட், மின்சாரம் உட்பட 8 துறைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் தொழில்துறை உற்பத்தி 5.1 சதவிதமாக இருந்தது. பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட அடுத்த மாதமே இதன் வளர்ச்சி சரிந்து 2.4 சதவிதமாக குறைந்தது. பின்னர் 2017 ஜூன் மாதம் மைனஸ் 0.3 சதவிதமாக குறைந்தது. 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் அதிகபட்சமாக 8.5 சதவிதம் வரை அதிகரித்து பின்னர் மீண்டும் சரிவை சந்தித்து வந்த தொழில்துறை உற்பத்தி, 2019 ஆகஸ்ட் மாதத்தில் மைனஸ் 1.4 சதவிதமாக சரிந்தது. தொடர்ந்து இரண்டாவது மாதமாக செப்டம்பர் மாதத்திலும் மைனஸ் 4.3 சதவிதமாக குறைந்துள்ளது.

இரண்டாம் காலாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி எப்படி இருந்தது என்பது குறித்த தகவல்கள் வரும் 29-ம் தேதி வெளியாகும். இந்திய ரிசர்வ் வங்கி கணிப்பின் படி, 2-ம் காலாண்டின் மொத்த உள்நாட்டு வளர்ச்சி 5.3 சதவிதமாக இருக்கும், என்றும், இது 3-ம் காலாண்டில் 6.6 சதவிதமாகவும், 4-ம் காலாண்டில் 7.2 சதவிதமாக அதிகரிக்கும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்தது. 2019-20-ல் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.1 சதவிதமாக இருக்கும் என்று கணித்திருந்தது. ஆனால் தற்போது தொழில்துறை உற்பத்தி நிலை, 2-ம் காலாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் எதிரொலிக்கும் என்பதால், 2-ம் காலாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 சதவிதத்திற்கும் குறைவாகவே இருக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

Also see:

 First published: November 12, 2019
Source link

Tags
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close
%d bloggers like this: