செய்திகள்

இலங்கையில் இடைக்கால மந்திரிசபை – அதிபரின் சகோதரர்களுக்கு முக்கிய பதவிகள் |


மகிந்த ராஜபக்சே தலைமையில் இன்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அமைத்துள்ள இடைக்கால மந்திரிசபையில் அவரது சகோதரர்களுக்கு முக்கிய பொறுப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு:

இலங்கை அதிபர் பதவிக்கு சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்ற கோத்தபய ராஜபக்சே அந்நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தின்படி அதிக அதிகாரம் கொண்டவராக இருந்தாலும் அவரால் எந்த அமைச்சகத்தையும் நிர்வகிக்க இயலாது.

 

தேர்தல் முடிவுக்கு பின்னர் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, அடுத்த பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்சே நேற்று பதவியேற்றுக்கொண்டார்.

இலங்கை பாராளுமன்றத்துக்கான தேர்தல் வரும் 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள நிலையில், 16 பேருடன் இடைக்கால மந்திரிசபையை கோத்தபய ராஜபக்சே இன்று அமைத்துள்ளார்.

புதிய மந்திரிகளுடன் கோத்தபய ராஜபக்சே

இந்த மந்திரிசபைக்கு தலைமை தாங்கும் பிரதமர் மகிந்த ராஜபக்சேவுக்கு ராணுவம் நிதி ஆகிய முக்கிய துறைகள் ஒதுகப்பட்டுள்ளன.

கோத்தபய ராஜபக்சேவின் மூத்த சகோதரரான சமல் ராஜபக்சேவுக்கு வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை வழங்கப்பட்டுள்ளது. வெளியுறவுத்துறை மந்திரியாக தினேஷ் குணவர்தெனா நியமிக்கப்பட்டுள்ளார்.
Source link

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close
%d bloggers like this: