இந்தியா

`இந்தக் குழந்தையால் எங்களுக்கு அவமானம்!’ -மகளுக்கே தெரியாமல் 3 லட்ச ரூபாய்க்கு விற்ற சேலம் பெற்றோர்

ஆனால், மீனாவின் பெற்றோர்களோ, அந்தக் குழந்தையைச் சென்னையைச் சேர்ந்த ஒருவருக்கு மூன்று லட்சம் ரூபாய்க்கு விற்றுள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய ராஜா, “நானும் மீனாவும் உறவினர்கள். காதலித்துத் திருமணம் செய்துகொண்டோம். திருப்பூரில் வாழ்ந்து வந்த எங்களுக்குக் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது.

அந்தச் சமயத்தில் மீனாவின் உடல் நலம் பாதிக்கப்பட்டதால், என்னால் தனியாகப் பார்த்துக்கொள்ள முடியவில்லை. அதனால் குழந்தையையும் மீனாவையும் அவரின் தாய் வீட்டுக்கு அனுப்பி வைத்தேன். நான் அவர்களுக்கு எப்போது போன் செய்து விசாரித்தாலும் தாயும் குழந்தையும் நலமாக உள்ளதாக மீனாவின் பெற்றோர் கூறி வந்தனர். ஆனால், குழந்தை பிறந்த இரண்டு வாரத்துக்குள், அவர்கள் வேறு ஒருவருக்கு குழந்தையை விற்றுள்ளனர். மீனாவின் உடல்நிலை மோசமாக இருந்ததால் அவளுக்கு நடந்த சம்பவங்கள் எதுவும் தெரியாது.


Source link

Tags
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close
%d bloggers like this: