இந்தியா

அடுத்த 2 நாட்களுக்கு சூப்பர் மழை இருக்கு.. 4 மாவட்டங்களில் கனமழை.. வானிலை மையம் அறிவிப்பு! | Weather Report: Heavy rain expected to pour for next two days in TN

Chennai

oi-Shyamsundar I

|

சென்னை: தமிழகத்தில் பல பகுதிகளில் இன்றும் நாளையும் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்து இருக்கிறது.

தமிழகத்தில் ஆங்காங்கே தினமும் மழை பெய்து வருகிறது. முக்கியமாக டெல்டா மாவட்டங்களில் தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. இந்த மாத தொடக்கத்தில் தமிழகம் முழுக்கவே பரவலாக மழை பெய்தது.

Weather Report: Heavy rain expected to pour for next two days in TN

நீலகிரி, சேலம், கோவை, ஊட்டி, கொடைக்கானல் போன்ற பகுதிகளில் இந்த மாத தொடக்கத்தில் வரலாறு காணாத அளவிற்கு மழை பெய்தது. ஆனால் இந்த மழை போக போக குறைந்தது. கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யவில்லை.

நேற்று சென்னையின் புறநகர் பகுதிகளில் மட்டும் மழை பெய்தது. இந்த நிலையில் தமிழகத்தில் பல பகுதிகளில் இன்றும் நாளையும் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்து இருக்கிறது.

ஒடிசா அருகே உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தென் கிழக்கு மற்றும் மத்திய வங்க கடல் பகுதிகளில் மழை மேகங்கள் அதிகமாக உருவாகும். இதனால் தமிழகத்தில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சேலம், கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்யும். சென்னையில் இன்று மாலைக்கு மேல் மழை பெய்யும். அடுத்த 3 நாட்களுக்கு மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம், என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!
Source link

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close