விளையாட்டு

அடுத்த மலிங்கா இவரு தான்.. ஐபிஎல்-ல துண்டை போடுங்க.. யாருப்பா அந்த பெரியசுவாமி? | TNPL Final 2019 : G Periyaswamy is the next Malinga as he follows the legend

5 விக்கெட்கள்

5 விக்கெட்கள்

2019 டிஎன்பிஎல் இறுதிப் போட்டியில் 5 விக்கெட்கள் எடுத்து அசத்திய பெரியசுவாமி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். திண்டுக்கல் டிராகன்ஸ் அணி இவரின் பந்துவீச்சில் இரண்டாவது ஓவரிலும், கடைசி ஓவரிலும் மட்டுமே 5 விக்கெட்களை இழந்தது.

கடைசி இரு ஓவர்கள்

கடைசி இரு ஓவர்கள்

பெரியவாமி இரண்டாம் ஓவரில் 2 விக்கெட்கள் வீழ்த்தி திண்டுக்கல் அணியை திணற வைத்தார். அப்போது முதல் கடைசி வரை அந்த அணி தடுமாறி வந்தது. கடைசி 3 ஓவர்களில் 29 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் 18வது ஓவரை வீசிய அவர் 6 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.

கடைசி ஓவர் எப்படி?

கடைசி ஓவர் எப்படி?

கடைசி ஓவரில் 15 ரன்கள் எடுத்தால் திண்டுக்கல் வெற்றி பெறும் என்ற நிலையில் 2 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்கள் வீழ்த்தினார் பெரியசுவாமி. சேப்பாக் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.

தொடர் நாயகன் விருது

தொடர் நாயகன் விருது

இறுதிப் போட்டியின் ஆட்டநாயகன் விருதோடு, 2019 டிஎன்பிஎல் தொடரில் 21 விக்கெட்கள் வீழ்த்திய பெரியசுவாமி தொடர் நாயகன் விருதையும் சேர்த்தே தட்டிச் சென்றார். இதுவரை டிஎன்பிஎல் வரலாற்றில் ஒரே தொடரில் ஒரு வீரர் 17 விக்கெட்கள் வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. அதை முறியடித்துள்ளார் பெரியசுவாமி.

மலிங்கா ஸ்டைல்

மலிங்கா ஸ்டைல்

பெரியசுவாமி, மலிங்காவின் ஸ்டைலில் பந்துவீசி வருகிறார். அதே ஓட்டம் மற்றும் கை அசைவு கொண்டு பார்க்க அப்படியே மலிங்கா பந்து வீசுவது போலத் தான் இருக்கிறது. உடல் மொழி மட்டுமில்லாது, நுணுக்கங்களிலும் அவரை பின்பற்றி வருகிறார்.

யார்க்கர் தான் சிறப்பு

மலிங்காவின் பந்துவீச்சில் யார்க்கர் தான் சிறப்பு. மின்னல் வேகத்தில் வரும் யார்க்கர் பந்துகளை கணிக்க முடியாமல் பேட்ஸ்மேன்கள் திணறுவார்கள். அதே போல டிஎன்பிஎல் தொடரிலும் பெரியசுவாமி யார்க்கர் வீசி கலக்கினார்.

ஐபிஎல் வாய்ப்பு

ஐபிஎல் வாய்ப்பு

டிஎன்பிஎல் தொடரில் பெரிய அளவில் கவனம் ஈர்த்த பெரியசுவாமி அடுத்து ஐபிஎல் தொடரில் வாய்ப்பு பெறுவார் என கருதப்படுகிறது. 2020 ஐபிஎல் தொடரில் இவரது யார்க்கர் தெறிக்குமா?


Source link

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close